செய்திமுரசு

சிறப்புக் கட்டுரை: மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்!

ஊடகத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பதில் மனநிறைவு, பெருமை என்பதையெல்லாம் தாண்டி ஒரு கர்வம் கொண்டவன் நான். யாரையும் கேள்வி கேட்க முடிகிற வாய்ப்பால் வளர்ந்த கர்வம் அல்ல, சமுதாய மாற்றத்தில் ஒரு மையமான பாத்திரம் வகிக்கிற ஊடகத்தில் ஒரு சிறு புள்ளியாகவேனும் இருக்கிறோம் என்ற உணர்வால் ஏற்பட்ட கர்வம் அது. அந்தக் கர்வம் தகர்ந்து கூசிப்போய் நிற்கிற தருணங்களும் ஏற்படுவதுண்டு. ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையில் தென்னிந்திய திரைப்பட பெண்கள் சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அத்தகைய தருணங்களில் ஒன்று. அறம் ...

Read More »

விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இந்த போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் எவருக்கும் உரிமை இல்லை!

வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கத்தில் தமிழ் மக்கள் பேரவையினூடாக உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கடும் சவால்கள் நிறைந்திருந்த கடந்த 5 வருட காலத்தில் என்னுடன் பணியாற்றிய சக மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், எனக்கு ஆதரவு நல்கிய நண்பர்கள், தோளோடு தோள் நின்று சேவையாற்றிய தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ...

Read More »

கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும்!

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று முணுமுணுக்கும் முக்கியஸ்தர்களின் முனகல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். முதலாவது வடமாகாணசபையின் இறுதி அமர்வான நேற்று(23) அவர் ஆற்றிய ...

Read More »

தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில்

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று (24.10.18) காலை ஆரம்பமாகியது. இந்நிகழ்வானது பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் தலமையில் கூட்டம் ஆரம்பமானது. இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.

Read More »

தசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்!

பல தசாப்தங்களாக இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக பாதிக்கப்பட்டசிறுவர்களிடம் அவுஸ்திரேலியாவின் சார்பில் பிரதமர் ஸ்கொட் மொறிசன் மன்னிப்பு கோரியுள்ளார். .பல தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளமை ஐந்து வருடங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே பிரதமர் தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார். இன்று இறுதியாக நாங்கள் சிறுவர்களின் கதறல்களை ஏற்றுக்கொள்கின்றோம் எதிர்கொள்கின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டு மன உளைச்சலிற்குள்ளனவர்கள் முன்னாள் மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் பணிவுடையவர்களாகயிருக்கவேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தழுதழுத்த குரலில் உரையாற்றிய பிரதமர் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை ஏற்றுக்ககொண்டதுடன் ...

Read More »

2019 தேர்தலுக்கு பின்னர்தான் இனி இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவேன்!

2019 இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான் இனி இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவேன் என இம்ரான் கான் கூறியுள்ளார். பயங்கரவாதம் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். எல்லையில் பயங்கரவாத தாக்குதல் காரணமாக பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துவிட்டது. பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் இந்தியா தோலுறித்து வருகிறது. இந்நிலையில் சவுதிக்கு சென்றுள்ள இம்ரான் கான் பேசுகையில், 2019 இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான் இனி ...

Read More »

றோ, சிறிசேன, சம்பந்தன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பு (Research and Analysis Wing – RAW) கொலை செய்வதற்கு சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தகவல் இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை முக்கித்துவப்படுத்தி பிரசுரித்திருக்கின்றன. கடந்த செய்வாக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்தத் தகவலை முதல் முதலாக கொழும்பிலிருந்து வெளிவரும் எக்கநொமிநெக்ஸ்ட் (economynext.com) இணையத்தளமே ...

Read More »

வடக்கு மாகாண சபை ஆரம்பத்தின் போது ஒற்றுமை! முடிவடைகின்ற போது?

வடக்கு மாகாண சபை, ஆரம்பத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக இருந்த போதிலும், சபை முடிவடைகின்ற போது, அத்தகைய ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுவதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவலை தெரிவித்தார். அத்துடன், கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறியிருக்கின்ற நிலையில், புதிய கட்சிகள் உருவாகக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில், நேற்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 2013ஆம் ஆண்டில், கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இணைந்து, ...

Read More »

மைத்திரி கொலை சதி சந்தேக நபரிடம் இன்றைய தினம் விசாரணை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கர வாத தடைச் சடத்தின் கீழ் இன்றைய தினம் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளார். கொலைச் சதி விவ­காரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்­வா­விடம் நேற்று மூன்­றா­வது நாளாக 10 மணி நேர விசா­ரணை நடத்­தப்­பட்­டது. கடந்த வாரத்தின் வியா­ழ­னன்று 9 மணி நேரமும், வெள்­ளி­யன்று ...

Read More »

உலகின் மிக நீண்ட கடல் பாலம் விரைவில் திறக்கப்படுகிறது!

ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இதுவாகும். உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் திகதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது. ...

Read More »