சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கர வாத தடைச் சடத்தின் கீழ் இன்றைய தினம் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளார்.
கொலைச் சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் நேற்று மூன்றாவது நாளாக 10 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த வாரத்தின் வியாழனன்று 9 மணி நேரமும், வெள்ளியன்று 10 மணி நேரமுமாக 19 மணி நேரம் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ள நாலக டி சில்வாவிடம் நேற்று காலை 9.15 முதல் இரவு 7.15 வரை விஷேட விசாரணைகள் நடத்தப்பட்டன.
நேற்றும் அவரிடம் விசாரணைகளை முழுமைப் படுத்த முடியாமல் போனதாக கூறிய காவல்துறை பேச்சாளர் காவல்துறை அத்தியட்சர் ருவன் குணசெகர, இன்னுமொரு நாள் எஞ்சிய விசாரணைகளை முன்னெடுக்க அவரை அழைப்பது என விசாரணையாளர்கள் தீர்மானித்துள்ளார்.
இதனிடையே இன்றைய தினம் இந்த கொலை சதி விவகாரத்தில், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் நிலையில், அவர் கோட்டை நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்படவுள்ளார்.
கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவ்வாறு அவர் ஆஜர்ச் செய்யப்படவுள்ள நிலையில், இடம்பெறும் விஷேட விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal