தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தபின், கத்தார் அரசின் உதவியுடன் விமானங்களை இயக்கும் பணிகளை தலிபான் அரசு முடுக்கிவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதனால் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமானதாக அறிவித்த தலிபான்கள், விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர். இந்தப் புதிய அரசில் தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், அந்த ...
Read More »செய்திமுரசு
நுவரெலியாயாவில் ஐந்து வருடங்களில் 52 ஆயிரம் குடும்பக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!
இந்தியா வம்சாவளி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் (2015 – 2019) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தகவல்கள் உறுதி செய்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் குடும்பங்களை ஏமாற்றி குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற. குறிப்பாக இதுத் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கடந்தக் காலங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ...
Read More »ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை….!
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் . இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ...
Read More »ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்
தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்- மறைந்த மங்கள சமரவீரவின் அணுகுமுறையைக் கையாண்ட பீரிஸ்’. பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் ...
Read More »நெஞ்சுக்கு முன் துப்பாக்கியை நீட்டியபோதும் அசராத பெண்
ஆப்கானிஸ்தானில் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்துக்கு எதிராக அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமானவை என்று தலிபான்கள் தரப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களால் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக பல பெண்கள் களத்துக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இப்படி காபூல் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் ...
Read More »பெண்கள் கிரிக்கெட்டை தடை செய்தால்… ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நவம்பர் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. நேற்று முன்தினம் புதிய அரசின் விவரம் அறிவிக்கப்பட்டது. தலிபான் அரசு பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தலிபான் கலாச்சார கமிஷன் துணைத்தலைவர் வாசிக் கூறும்போது, ‘ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’. ...
Read More »மட்டு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை நடந்து இன்று 31 ஆண்டுகள் முடிந்தும் நீதிகிடைக்கவில்லை!
கிழக்கில் நடந்தேறிய கொடூரமான மற்றுமொரு இனப்படுகொலை சத்துருக்கொண்டான் இனப்படுகொலை இது நடந்து இன்று 31 ஆண்டுகள் முடிந்தும் இந்த படுகொலை உட்பட கிழக்கிலே நடந்தேறிய எந்தப்படுகொலைக்கும் நீதிகிடைக்கவில்லை. இப்படிப்பட்ட படுகொலைகளுக் கெல்லாம் நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை 31 ஆவது நினைவு நாளன இன்று ஆகும் அதனையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஊடக ...
Read More »623 பொருட்களின் இறக்குமதிக்கு வரையறை
கைத்தொலைபேசிகள், டயர்கள் மற்றும் ஆடைகள் உட்பட 623 பொருட்களின் இறக்குமதிக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு 100% எல்லை வைப்பு தேவைப்பாட்டை அத்தியாவசியமாக்கி உடனடியாக அமுல்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித் துள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கைத்தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், கைக்கடிகாரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், இறப்பர் டயர்கள், பழங்கள், குளிரூட்டிகள், பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட 623 பொருட்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கையானது வங்கி அமைப்பில் பரிமாற்ற வீத நிலைத்தன்மை மற்றும் ...
Read More »கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி வருகிற 20-ந் தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் ...
Read More »இந்தியா உலகின் சிறந்த அணி – ஆ ஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே புகழாரம்
கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என வார்னே கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதல் இன்னிங்சில் பின்தங்கி இருந்து இந்த டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			