மட்டு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை நடந்து இன்று 31 ஆண்டுகள் முடிந்தும் நீதிகிடைக்கவில்லை!

கிழக்கில் நடந்தேறிய கொடூரமான மற்றுமொரு இனப்படுகொலை சத்துருக்கொண்டான் இனப்படுகொலை இது நடந்து இன்று 31 ஆண்டுகள் முடிந்தும் இந்த படுகொலை உட்பட கிழக்கிலே நடந்தேறிய எந்தப்படுகொலைக்கும் நீதிகிடைக்கவில்லை. இப்படிப்பட்ட படுகொலைகளுக் கெல்லாம் நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை 31 ஆவது நினைவு நாளன இன்று ஆகும் அதனையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (9) வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் குழாவடி பனிச்சையடி கொக்குவில் போன்ற 4கிராமங்களிலுமாக 205 பேர் காட்டுமிராண்டித்தனமாக 1990.09.09 படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதில் விசேட தேவையுடையோர் 10 பேர் .10 வயதுக்குட்பட்டவர்கள் 42 பேர் முதியோர் 28 பேர் 40 வயதுக்குறைந்த பெண்கள் 85 பேர். ஆண்கள் 40 பேர் .படுகொலை செய்யப்பட்டனர் இவ்வினப்படுகொலை நடந்த 31 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இவ்வினப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

கிழக்கிலே நடந்தேறிய திராய்க்கிணி படுகொலை கொக்கட்டிச்சோலைப்படுகொலை வந்தாறுமூலைப்படுகொலை வீரமுனை படுகொலை நாவிதன்வெளி படுகெலை தங்கவோலாயுத போன்ற எந்தப்படுகொலைக்கும் நீதிகிடைக்கவில்லை.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்களை செய்ய விடாது தடுத்ததுடன் இன்று பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் கொரோனா ஊரடங்கு சட்டம் என்பவற்றால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது உறவினர்களுக்காக அமைக்கப்பட்ட சத்துருக்கொண்டான் தூபியில் கூட அந்த மக்கள் சுடர் ஏற்ற முடியாத துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது
;.
எனவே சர்வதேசநாடுகள் இலங்கைத்தீவிலே தமிழர்கள்மீது நடந்த நடந்து கொண்டிருகின்ற இனப்படுகொலையை விசாரிப்பதற்கு பொறுப்புக்கூறல்விடயத்தை அதிகாரமற்ற ஐநா மனித உரிமை பேரவையிலிருந்து ஐநாவின் பொதுச்சபைக்கு பாரப்படுத்தி பாதுகாப்புச்சபையூடாக சர்தேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்.