அஜித் பிரசன்னா என்ற முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துக்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரை காவல் துறையிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், சுவிட்ஸ்ர்லாந்து தூதுவர் எமது தாய்நாட்டின் பெயரை கெடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
Read More »செய்திமுரசு
நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூ ஆர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணி வரை இடம்பெற்றுள்ளதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்த 5 பேர் நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையிலும், ஏனைய 5 பேர் துலேன் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர். ...
Read More »அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு முட்டுக்கட்டை!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அவர்களை ஆஸ்திரேலிய அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது மருத்துவ வெளியேற்றச் சட்டம். இவ்வாறான தடுப்பு முகாம்கள் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம், இச்சட்டம் ஆளும் லிபரல் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இச்சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்து வருகிறது ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசாங்கம். இந்த சூழலில், நவுருவில் உள்ள அகதிகள் நாட்டிற்கு வெளியே ...
Read More »ஜெனிவா பிரேரணைக்கு பதிலாக மாற்று யோசணை…….!
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள இந்த முக்கியமான மற்றும் மாற்றமான புதிய அரசியல் சூழலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தீர்க்கமானதாக உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் விடயத்தில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படும் மற்றும் கடந்த காலங்களில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணை குறித்தும் இந்தக் கூட்டத் தொடரில் ...
Read More »13ஆவது அரசியலமைப்பு குறித்த இந்திய பிரதமரின் அறிப்பை ஏற்கின்றோம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் ...
Read More »இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு!
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் ...
Read More »சுரிநாம் நாட்டை ஆளும் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சுரிநாம் நாட்டு தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிறிய நாடான சுரிநாம், 1975 ம் ஆண்டு நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்ஸ் (வயது 74). 1980ம் ஆண்டு சுரிநாம் நாட்டில் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது ஆட்சியை பிடித்த பவுட்டர்ஸ் தற்போது வரை சுரிநாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். போதைப்பொருட்கள் வழக்கிலும் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ள இவர் மீது ...
Read More »யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு – பேரவை இன்று கூடுகிறது !
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் நாளைத் தீர்மானிப்பதற்கும், துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவை அமைப்பதற்காகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஒக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தெரிவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய விண்ணப்பதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் இ. ...
Read More »பிரித்தானிய தூதுவருடன் சுமந்திரன் சந்தித்து பேச்சு!
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் கேட்டறிந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை பிரித்தானியத் தூதுவர் சந்தித்து பேசினார். தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சுமந்திரன் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்துள்ளார்.
Read More »ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு!
ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை இளம்பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த அவர் ஒரு நிமிடம் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			