செய்திமுரசு

கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர் அதிபர்களின் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஓர் உடன்பாட்டை எட்ட முடியாததால் இணையக் கற்பித்தல் செயற் பாடுகளிலிருந்து விலகி வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 68 பேருக்கு கொவிட் தொற்று

யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 68 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 436 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 55 பேருக்குத் தொற்று,கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read More »

டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்

கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் கூறுகையில், டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அதன் பரவல் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையாக ஆக கூடும். அனைத்து வகையான கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக ...

Read More »

விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 12 பேருக்கு கோவிட் தொற்று

விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நடைமுறையிலுள்ள முடக்கநிலையை ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை நள்ளிரவுமுதல் தளர்த்தமுடியாது என Premier Daniel Andrews அறிவித்தார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்முடக்கநிலை நீடிக்கப்படவுள்ளது என்ற விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளன. புதிதாக தொற்றுக்கண்டவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம்  வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து ...

Read More »

’மாகாண எல்லைகளை கடக்க முடியாது’

திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட காவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணத்துக்காக உரிய ஆவணங்களைச் சமர்பிப்பிதன் மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருமண நிகழ்வின் போது மணமக்கள் இரண்டு மாகாணங்களில் இருப்பின் ஒரு தரப்பினருக்கு அடுத்த மாகாணத்துக்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன்போது மணமக்களின் பெற்றோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன், வேறு எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது ...

Read More »

சீன ஆய்வு கூடத்தில் விபரீதம்: குரங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்கி ஊழியர் பலி

சீனாவில் பரவிய கொரோனா நோயால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் குரங்கிடம் இருந்து பரவிய வைரசால் ஒருவர் பலியாகி இருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய ஒருவகை வைரசால் வன விலங்கு ஆய்வுக்கூட ஊழியர் பலியாகி இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகள் திடீரென இறந்துவிட்டன. ...

Read More »

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

புதிய அமைச்சரின் கீழ் அதிகளவு மாற்றம் இல்லை

*தவறுகளின் அபாயத்தைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன வளர்ச்சியைத்தடத்திற்கு கொண்டுவர முன்னுரிமைஅளிக்கப்படும். *ஜிஎஸ்பி +இல்லாமல் சிறப்பாக செயற் பட்டதை மத்திய வங்கிகாண்பிக்கிறது  *சர்வதேச நாணய நிதியத்தின்இலங்கை ரூபா ஒதுக்கீடுகளுடன் எந்த நிபந்தனைகளும் இணைக்கப்படவில்லை . *முன்னைய அரசு விட்டுச்சென்ற குறைந்தளவு கையி ருப்பால் கடினமான காலம். மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி, பாரியளவு வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தவேண்டியிருத்தல் , அதிகரித்துவரும் வறுமையை குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளில் ஆற்ற ல் போதாமை ஆகியவற்றுடன் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது என்ற கருத்துக்களுக்கு மத்தியில், ...

Read More »

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவு – ஐநா இரங்கல்

தலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன. இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக்கி ஈடுபட்டிருந்தார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி ...

Read More »

பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவி

மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இது தொடர்பான கடிதம், ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »