செய்திமுரசு

முடக்கப்பட்டது அனலைதீவு – ஏன்?

மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனலைதீவுப் பகுதியை அதிகாரிகள் முற்றாக முடக்கியுள்ளனர். இன்று காலை அனலைதீவுப் பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவுப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுவதைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அனலைதீவுப் பகுதியை முடக்கியுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் நடமாடியதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து காரைநகரில் அடையாளம் காணப்பட்ட ஐந்து வீடுகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். தீவகத்துக்கான போக்குவரத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

Read More »

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்

மன்னார் ஆயர் இல்லம் ‘கொரோனா’ அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்.. மன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த புதன் கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற போது குறித்த நபருக்கு எழுந்த மானமாக பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று வியாழக்கிழமை இரவு கிடைக்கப் பெற்றது. அதற்கமைவாக ...

Read More »

பருவ நிலை மாற்றத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட நியூசிலந்துப் பிரதமர் உறுதி

பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராட நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Arden), உறுதியளித்துள்ளார். அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில், வெற்றிபெற்றால், நிலக்கரியைப் பயன்படுத்தும் கொதிகலன்களை தமது அரசாங்கம் நீக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர். 2025க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நீக்க உதவும் பேருந்துகளை வாங்க உள்ளூர் அமைப்புகளுக்கு 32.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கப்படும் என்று திருவாட்டி ஆர்டன் சொன்னார். வரும் தேர்தலில், ...

Read More »

சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! – பகுதி 1

கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின. புதிய இயல்பு அல்லது புதிய வழமை கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ‘New Normal’ எனப்படும் ...

Read More »

உலகிற்கு செய்த செயலிற்காக சீனா பெரும் விலையை செலுத்தும்- டிரம்ப் கடும் எச்சரிக்கை

உலகிற்கு செய்த விடயத்திற்காக சீனா பெரும் விலையை செலுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். புதன்கிழமை வெளியாகியுள்ள காணொளியில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். இது இடம்பெற்றது உங்களின் தவறினால் இல்லை என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் இது சீனாவின் தவறு என குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிற்கு செய்தமைக்காகவும் சீனா பெரும் விலையை செலுத்தப்போகின்றது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பின் பின்னர் டிரம்ப் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவார் என சீனா எதிர்பார்த்திருந்தது என தெரிவித்துள்ள சிஎன்என் தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் ஈரானுக்கு ...

Read More »

அதி உயர் அபாய வலயமாக வெயாங்கொட பிரதேசம்!

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள வெயாங்கொட பிரதேசத்தில் மிக அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அந்தப் பிரதேசம் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்ததாக அதிகளவிலான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது இனங்காணப்பட்டு வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read More »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லா விட்டால் அரசை எதிர்த்து எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளையினர் தெரிவித்துள்ளார்கள். இவ்விடையம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை இன்று வியாழக்கிழமை (8) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதம கொரடா மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் போன்ற பதவிகள் வழங்குவது தொடர்பான ...

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஒரு நாள் போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. பிரிஸ்பேனில் நவம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் மூன்று ஒரு நாள் போட்டிகளையும், அடிலெய்டில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் மூன்று 20 ஓவர் போட்டிகளையும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ...

Read More »

13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும்

சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா? அது ஒரு புறமிருக்க, இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் அந்தத் ...

Read More »

அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம் மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என ...

Read More »