அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம் மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

சீனாவும் இலங்கையும் சுதந்திரமான நாடுகள் ,அவற்றிற்கு தங்களின்தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வெளிநாட்டுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான உரிமையுள்ளது எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியான காலங்களில் சீனாவும் இலங்கையும்பரஸ்பரம் ஆதரவாகவும் உறுதியாகவும் காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுரகம் சீனவுடனான உறவுகள் குறித்து இலங்கைமக்களும் அரசாங்கமும் தங்களின் சுயாதீனமான மதிப்பீடுகளை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரைவழங்குவதற்குஅமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ள சீன தூதரகம் இப்படியான வெளிப்படையான மேலாதிக்க ஆதிக்கஅதிகாரஅரசியலை சீன மக்களோ அல்லதுஇலங்கையர்களோ சகித்துக்கொள்ளப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு போதனைசெய்யும் ஆனால் நடைமுறையில் அதனை பின்பற்றாத பழக்கத்திலிருந்து விடுபடுமாறு அமெரிக்காவிற்கு ஆலோசனைவழங்குகின்றோம்எனவும் சீனா தெரிவித்துள்ளது.

உலகின் மறுபக்கத்தில் உள்ள ஆணவம் பிடித்த நண்பர்களுக்கான எங்களின் நான்குஆலோசனைகள் இவை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக காணப்படுகின்ற அதேவேளை கொவிட் 19க்கு எதிரான ஏனைய நாடுகளின் நடவடிக்கைகளை நிந்தனை செய்யவேண்டாம்.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் விதிமுறைகளைமீறியபடி சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலன் என நடிக்கவேண்டாம்.
சர்ச்சைக்குரிய எம்.சி.சி உடன்படிக்கை குறித்த விடயங்களைமறைத்தபடி வெளிப்படைதன்மை குறித்த பதாகையை உயர்த்தி பிடிக்கவேண்டாம்.

வெளிநாடுகளில் குண்டுவீச்சுகளை மேற்கொண்டவாறு வெளிநாட்டு இராணுவ தளங்களை ஆக்கிரமித்தவாறு, தன்னிச்சையாக தடைகளை விதித்தவாறு ஏனையவர்களின் சாதாரண உறவுகளை இறைமைக்குஆபத்து என விமர்சிக்கவேண்டாம் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அபத்தமான போலியான இந்த செயற்பாடுகள் ஏற்கனவே மிகமோசமான நிலையில் உள்ள அமெரிக்காவின் சர்வதேச உறவுகளை மேலும் பாதிக்கும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.