செய்திமுரசு

ஆஸ்திரேலியா காட்டுத்தீ – 113 விலங்கினங்கள் அழிந்துவிடும் ஆபத்து!

ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு உடனடி உதவி தேவை என்றும், அப்படி உதவி கிடைக்காவிட்டால் விலங்கினங்கள் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கோடை வெயில் காரணமாக அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த காட்டுத்தீயில் கோலா கரடிகள் உள்ளிட்ட பல அரிய வகை வன உயிரினங்கள் செத்து மடிந்தன. பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என சுமார் 100 கோடி வன உயிரினங்கள் இந்த ...

Read More »

ஒரே நாளில் 242 பேர் பலி – கொரோனா வைரஸ்!

சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த  வைரஸ் பரவியுள்ளது. சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த  ...

Read More »

மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.     இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.   இந்நிலையில், இன்று (12), குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.   ...

Read More »

இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ...

Read More »

தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயினால் பலியானோர் எண்ணிக்கை சீனாவில் 1,113 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த  வைரஸ் பரவியுள்ளது. சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த  வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் ...

Read More »

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் – பத்திரிகையாளரிடம் சிஐடி விசாரணை!

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை இலங்கை குற்றப்புலானய்வு திணைக்களத்தினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் அனுரங்கி சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்ரியன் தொடர்பிலும் சுவிஸ் தூதரக விவகாரத்தில் அவருக்;கு இருக்ககூடிய தொடர்புகள் குறித்தும் பத்திரிகையாளரிடம் விசாரணைகள் இடம்பெற்றதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர். அனுரங்கி சிங் பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனித புதை குழி!

மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதோடு, கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறித்து மன்னார் காவல் துறை  மன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த வழக்கு விசாரனை எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

Read More »

யார் இந்த கேஜ்ரிவால்?

2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கேஜ்ரிவால் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 3-ம் முறையாக அவர் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். ஹரியாணாவில் ஒரு நடுத்தரப் பொறியாளரின் குடும்பத்தில் 1968-ம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். கோரக்பூரில் உள்ள ஐஐடியில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் ஜாம்ஷெட்பூரில் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்னர் அரசுப் பணித் தேர்வுக்குத் தயாரானதால் தனியார் பணியை விட்டு விலகினார். கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வசித்த அவர் அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், ராமகிருஷ்ணா மடம் ...

Read More »

பொதுத் தேர்தலுக்கு பின்னர் தெரிவாகும் தமிழர் பிரதிநிதிகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்!

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளாத விடயங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதானால் தமிழர்களுக்காக பேசக் கூடிய பொறுப்புள்ள பிரதிநிதிகள் எமக்குத் தேவை. ;அதனால் பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் தமிழர்களினால் தெரிவு செய்யப்படக் கூடிய பிரதிநிதிகளுடன் எதிர்காலம் குறித்து பேச வருமாறு கேட்போம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தின் போது சனியன்று டில்லியில் வைத்து ‘ ...

Read More »

பாலியல் ரீதியான பகிடிவதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக கோசமிட்டனர். ‘மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே’, ‘தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா’, ‘நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம்’, ‘பாலியல் கல்வி என்பது ...

Read More »