சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை இலங்கை குற்றப்புலானய்வு திணைக்களத்தினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் அனுரங்கி சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்ரியன் தொடர்பிலும் சுவிஸ் தூதரக விவகாரத்தில் அவருக்;கு இருக்ககூடிய தொடர்புகள் குறித்தும் பத்திரிகையாளரிடம் விசாரணைகள் இடம்பெற்றதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
அனுரங்கி சிங் பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Eelamurasu Australia Online News Portal