யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக கோசமிட்டனர்.
‘மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே’, ‘தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா’, ‘நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம்’, ‘பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்துகொண்டனர்.
Eelamurasu Australia Online News Portal

