செய்திமுரசு

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சிகள்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்திருக்கும் வில்லாவுட் தடுப்பு முகாமில் 27 வயது ஆப்கான் அகதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே முகாமில் மூன்று தினங்களுக்கு முன்னர் ஈராக் அகதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்ற ஆப்கான் அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 முதல் தடுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அந்த அகதியின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். “ஆஸ்திரேலிய அரசு வேண்டுமென்றே குடிவரவு ...

Read More »

சந்தர்ப்பவாத அரசியல்!

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது.  அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த ...

Read More »

இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல்!

இந்தியாவில் நடக்கவுள்ள 17வது நாடாளுமன்ற தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 11-ந்திகதி தொடங்கி மே 19-ந்திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியாவில் 17வது நாடாளுமன்ற தேர்தலான இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது. தேர்தலுக்காக நாடு முழுக்க அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதிலும் வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரமாக உள்ளனர். தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என இந்தியா முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் ...

Read More »

மன்னார் மனித புதை குழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்?

மன்னார் மனித புதை குழியில் மீட்க்கப்பட்ட மனித எழும்புக் கூடுகள் யாழ்பாண மன்னனால் கொல்லப்பட்டவர்கன் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார். 1550 ஆம் ஆண்டு காலப்பகுதியில் “கிறிஸ்தவ மதத்தை தழுவியமைக்காக  போர்த்துக்கேயர் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவ்வாறு  யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனால் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடமே மன்னார் மனிதப் புதைகுழி…” என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் பேராசிரியர் ரி.ஜி.குலதுங்க தெரிவித்துள்ளார். பிரபல சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »

வெடி பொருட்கள் பயன்படுத்திய இருவர் கைது!

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று முன்தினம் வலைபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1233 கிலோ கிராம் மீன்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டன. குறித்த மீன் பொதி விற்பனைக்காக ஒரு கேப் வண்டியில் தயாராக இருக்கும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பொதி மற்றும் கேப் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி, துனை மீன்வளத்துறை அதிகாரி அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் இளைஞனைத் தாக்கிய கங்காரு!-காணொளி

பாராசூட் மூலம் தரையிறங்கியவரை கங்காரு தாக்கி காயப்படுத்திய காணொளி  வெளியாகி உள்ளது. அவுஸ்திரேலியாவில் கான்பெரா அருகே உள்ள வனப்பகுதியில், பாரா கிளைடிங் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இறங்கு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கங்காரு ஒன்று வேகமாக வந்து குறித்த இளைஞனை தாக்கியுள்ளது. முன்பக்க கால்களால் தாக்கியதில் இளைஞரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தொடர்கின்றன : கலாநிதி தீபிகா உடகம

சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். இதேவேளை, மனித உரிமைகளை அமுலாக்குவதற்கு அந்த விடயங்களை அரசியலாக்குவதே பிரதான தடையாக உள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார். அவர் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைகள் எவ்வாறு உள்ளன? பதில்:- 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டேன். ...

Read More »

யாழ்ப்­பா­ணத்தில் சூட்டு காயங்­க­ளுக்கு இலக்­கான இரா­ணு­வ சிப்­பாய்!

கட்­டுத் துவக்­கில் அகப்பட்டு  காயங்­க­ளுக்கு இலக்­கான நிலை­யில் இரா­ணு­வ சிப்­பாய் ஒரு­வர், யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் நேற்று இரவு சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இது தொடர்­பில் கிளிநொச்சி பூந­க­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது: பூந­கரி இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றும் இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர் நேற்று மாலை காட்­டுக்­குச் சென்­றுள்­ள போது அங்கே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத் துவக்­கில் அகப்­பட்­டுள்­ளார். இதன் கார­ண­மாக இரா­ணு­வச் சிப்­பா­யின் ஒரு காலில் குண்டு துளைத்­துள்­ளது. படு­கா­ய­ம­டைந்த இரா­ணு­வச் சிப்­பாய் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளதாக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் திமிங்கலத்தின் வாய்க்குள் மாட்டிக் கொண்ட நபர்!

அவுஸ்திரேலியாவுக்கருகே ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக குழு ஒன்று கடலுக்கு சென்றிருந்த போது ஒரு ஆழ்கடல் நீச்சல் வீரர் திமிங்கலத்தின் வாயில் சிக்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரரான Rainer Schimpf (51) தனது குழுவினருடன் கேப் டவுனுக்கு கிழக்காக உள்ள கடல் பகுதியில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். இரு குழுக்களாகப் பிரிந்து அங்கு நீந்திக்கொண்டிருந்த மீன்களையும், பறந்து கொண்டிருந்த பறவைகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தனது இடுப்பை ஏதோ பலமாக அழுத்துவதை உணர்ந்தார் Rainer. சில வினாடிகளுக்கு பிறகுதான் தான் ஒரு ...

Read More »

ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட வவுனியா பிரதேசசபை தலைவர்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவருக்கும் ஊடகவியலாளருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஓமந்தையில் மதுபானசாலையை மூடுமாறு கோரி நேற்று மாலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், மதுபானசாலை உரிமையாளருடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பிரதேசசபையின் தலைவர் மதுபானசாலையை நோக்கி சென்று மதுபானசாலைக்குள் தனித்து இரகசியமாக உரிமையாளரை சந்திக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களையும் செல்லுமாறு கோரியிருந்தனர். ஊடகவியலாளர்களும் செய்தியை சேகரிக்க சென்றிருந்த போது பிரதேசசபையின் தலைவர் மதுபானசாலைக்குள் சென்றபோது ஊடகவியலாளர்கள் படம் எடுப்பதை பிரதேசசபை தலைவர் அவதானித்துள்ளார். அப்போது தான் ...

Read More »