கட்டுத் துவக்கில் அகப்பட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில் இராணுவ சிப்பாய் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பூநகரிப் பொலிஸார் தெரிவித்ததாவது:
பூநகரி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று மாலை காட்டுக்குச் சென்றுள்ள போது அங்கே பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுத் துவக்கில் அகப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இராணுவச் சிப்பாயின் ஒரு காலில் குண்டு துளைத்துள்ளது. படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal