செய்திமுரசு

பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது!

யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா  அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது என்று சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டிருக்கிறது. யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2000 ...

Read More »

நாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில்

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தபோது, “அப்படியென்றால், வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?” என்று, ஊடகவியலாளர் தரப்பில் வினாத் தொடுக்கப்பட்டது. அப்போது அவர்,  “தேர்தல் எப்போது நடக்க வேண்டும் என்பதைக் கொரோனா வைரஸ்தான் தீர்மானிக்கும்” என்று சொல்லியிருந்தார். சுருக்கமாகச் சொன்னால், இதுதான் இந்த நாட்டினது நிலைமையாகும். கொரோனா என்ற, கண்ணுக்குப் புலப்படாத வைரஸ்தான் நமது அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரத் தன்மையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றது என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இல்லை. உலக வரைபடத்தில், ஒரு ...

Read More »

‘பலரின் ஒத்துழைப்பு இல்லை’

மக்களுக்குள் இருக்கும் ஒரு சில பொறுப்பற்றவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே, கொரோன வைரஸ் தொற்று மக்களுக்கு மத்தியில் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யங்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். அத்துடன், மேலும் சில தனிமைப்படுத்தல் மய்யங்களை அமைப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இனங்காணப்படுபவர்களை தனிமைப்படுத்தி, கொரோனாவை முற்றாக அகற்றும் நோக்குடனேயே இந்த தனிமைப்படுத்தல் மய்யங்கள் ...

Read More »

கொரோனா அறிகுறிகளுடன் இருவர் அனுமதி!

கொரோனா தொற்றுக்கு இலக்கான அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர், நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்ட நிலையில், களுத்துறை- நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென, பண்டாரகம சுகாதார வைத்திய  அலுவலகம் தெரிவித்துள்ளது. டுபாயில் 2 நாள்கள் தங்கியிருந்து கடந்த 19 ஆம் திகதி நாடு திரும்பிய நபரே, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனதுடன், குறித்த நபர் அட்டுலுகம பிரதேசத்தில் பலருடன் தொடர்புகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடிதம்!

“கொரோனா வைரசால் நாங்கள் எளிதில் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய, மரணம் கூட ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது,” என ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தங்களை சமூகத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் முன்வைத்துள்ளனர். குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள தாங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதும் தனிமைப்படுத்திக் கொள்வதும் சாத்தியமற்றது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசின் அறிவுரையிலேயே, தடுப்பில் உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று ...

Read More »

அப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தியை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுப்பதற்கு பல்வேறு வழியிலான பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்களும், தனிநபர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தி என்று தலைப்பிட்டு ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய சச்சின்

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி, மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாயை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண ...

Read More »

அரசாங்கம் + கொரோனா = மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், தேவையற்ற விதத்திலான மக்களின் நடமாட்டமும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் கைதுகளும் 2,000க்கும்  மேற்பட்டு இருப்பதும் சட்டத்தை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ...

Read More »

கொரோனா குறித்து அறிய புதிய இணையதளம்

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றிய ...

Read More »

இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை!

இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதையே ஜனாதிபதியின் செயற்பாடு காட்டிநிற்கிறது. அவ்வாறு இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என்றால் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாக பொதுமன்னிப்பில் விடிவிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுபேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இந்த குற்றவாளிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ;பொதுமன்னிப்பளித்து விடுதலை ...

Read More »