செய்திமுரசு

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக கேபாராடிய கவுன்சிலர் கைது!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் Kangaroo Point ஹோட்டலில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சி கவுன்சிலர் Jonathan Sri கைது செய்யப்பட்டுள்ளார். குவின்ஸ்லாந்த் காவல்துறையினர் தன்னை கைது செய்ததில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நூற்றுக்கணக்கான மக்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், என்மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,” என Jonathan Sri குறிப்பிட்டுள்ளார். “நிலைமையை தணிக்க முயலாமல் படைப்பலத்தை மேலும் நிலைமை மோசமடையும் விதத்தில் காவல்துறையினர் பயன்படுத்தினர்,” என அவர் கூறியுள்ளார். கங்காரு ...

Read More »

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா

கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். 3000 இராணுவத்தை கொன்றதாக கருணா கூறுவது குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு அவருக்கு எதிரான நடவடிக்கையினை கோத்தாபய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் மூவாயிரம் இராணுவத்தை கொன்ற தான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று ...

Read More »

உறவுகளைத் தேடி போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்!

முல்லைத்தீவு -வள்ளிபுனம் பகுதியைச்சேர்ந்த தங்கவேல் சத்தியதேவி என்னும் தாயார் கடந்த இறுதியுத்த காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது ஐந்து உறவினர்களைத் தேடிவருகின்றார். இந் நிலையில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது தொடர் போராட்டத்தின் 1200ஆவது நாளான 20.06இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்த குறித்த சத்தியதேவி என்னும் தாயர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும்போது கதறிஅழுதபடியே மயங்கிவீழ்ந்தார். அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, எனது மருமகன் சின்னத்தம்பி – மகாலிங்கம், மகள் சிவாஜினி, பேரரப்பிள்ளைகளான மகிழினி, தமிழ்ஒளி, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பெற்றோரின் சடலங்களை நடுக்கடலில் கைவிட்டு நீந்தி கரை சேர்ந்த இளைஞர்

அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார். தொடர்ந்து இளைஞர் ரியான் மற்றும் அவரது காதலி கலினா ஆகியோர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரைக்கு நீந்தினர் ...

Read More »

போலிமனிதர்களை எம் தமிழ் தேசிய அரசியலில் இருந்து நீக்குங்கள்- சசிகலா ரவிராஜ்

போலி மனிதர்களை எமது தமிழ்தேசிய அரசியலில் இருந்து நீக்கி எம் இனத்தின் வீரத்தை உரிய நேரத்தில் வெளிக்காட்டுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்தேசிய தலைமையின் பிள்ளைகள் நாம் யாரை ஆதரிக்கவேண்டும்,யாரை நீக்கவேண்டும் என்ற முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனது மனதில் இருந்தவற்றை தெளிவாக தெரிவித்துவிட்டேன்,தமிழ்தேசியம் வெல்வதற்கு நீங்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை நீக்கவேண்டும் என்பதை நீங்கள ஊகித்துவிட்டதை உளமாற உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் களப்பணியை எந்த ஒரு தயக்கமும் இன்றி போலிமனிதர்களை ...

Read More »

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனைசெய்வதற்கான யோசனை- நிராகரித்தது தமிழ்நாடு

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு நிராகரித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை எங்களிடம் முன்வைத்தது என தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் எனினும் இலட்ச்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்று தமிழர்கள் ...

Read More »

தேர்தலில் யாரை ஆதரிப்பது?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார். பொது மக்களுக்குத் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் பல்கலைக்கழக ...

Read More »

சீண்டிப் பார்க்கும் சீனா: சீற மறுக்கிறதா இந்தியா?

“இமயமலையில், இன்னமும் எல்லை வரையறுக்கப்படாத பகுதி ஒன்றில் இந்திய – சீனத் துருப்புகளுக்கு நடுவே நடந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் கடும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன” என்று தொடங்குகிறது ‘சீனா டெய்லி’ எனும் சீன நாளிதழின் தலையங்கம். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) இந்தியத் துருப்புகள் இரு முறை தாண்டி வந்ததால் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்றும், ‘ஆத்திரமூட்டும்’ அவர்களது செயல், இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமைந்தது என்றும் அந்தத் தலையங்கம் குற்றம் ...

Read More »

வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே….

இலங்கையில் மோதல் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆகின்ற போதிலும் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுகின்றது என ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமைக்கான சுதந்திரம் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் கிளைமென்ட் யலெட்சோசி வியுல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநாவின் விசேட அறிக்கையாளர் அரசாங்கத்தின் உத்தரவுகளிற்கு அப்பால் இது சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். 2019 உயிர்த்த ...

Read More »

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விவகாரம் – பந்துல என்ன சொல்கிறார்?

ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு இருக்கும் அந்த உரிமையை ஒருபோதும் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க மாட்டோம் என ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை விநியோகிக்கும் ...

Read More »