அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார்.
தொடர்ந்து இளைஞர் ரியான் மற்றும் அவரது காதலி கலினா ஆகியோர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரைக்கு நீந்தினர் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அதிகாரி ஒருவர், இளைஞர்கள் இருவரும் கண்டிப்பாக பல மணி நேரம் சுறா பாதிப்பு மிகுந்த அந்த கடலில் நீந்தியிருப்பார்கள் என்றார்.
ஆக்ரோஷமான அலைகளில் சிக்கி இவர்களின் மீன்பிடி படகு கவிழந்த நிலையில், அதில் இருந்த இளைஞர்கள் இருவரும் நீர்பரப்புக்கு மீதே வந்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 70 வயதினை கடந்த அந்த தம்பதி கடற்பரப்பிற்கு மேலே வந்தபோது, அவர்கள் சுயநினைவை இழந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மேலும், இளைஞர் ரியான் தமது பெற்றோரின் உயிரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகவே, இறுதியில் தங்கள் உயிரை காக்கும் முயற்சியில் சுமார் 3 கிலோமீற்றர் தொலைவு நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
கடலுக்குள் செல்ல திட்டமிட்டதும் படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கருதியதாக கூறியுள்ள ஓஸ்ட்ரிக் குடும்பத்தார்,
ஆனால் படகு கவிழ்ந்த நிலையில், தங்களால் அந்த பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்த முடியாமல் போனது என்கின்றனர்.
இந்த விபத்து தங்களை முழுமையாக உலுக்கியுள்ளது என கூறும் ஓஸ்ட்ரிக் குடும்பத்தினருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதலாக பேசி வருகின்றனர்.