செய்திமுரசு

6 இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன. நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

Read More »

குழந்தைக்கு வீட்டுப்பாடம் வழங்க சீனாவில் தடை

சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இப்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கடும் மனஅழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக சிறு குழந்தைகள் வீட்டுப்பாடங்கள் செய்ய முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளார்கள். அவர்கள் விளையாடுவதற்கு, மனமகிழ்ச்சியோடு இருப்பதற்கு ...

Read More »

வெளிநாடுகளிலிருந்து மெல்பன் வருபவர்களுக்கு இனி ‘தனிமைப்படுத்தல் கிடையாது’!

வெளிநாடுகளிலிருந்து விக்டோரியா திரும்பும் ஆஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், விடுதிகளிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார். எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீக்கவுள்ள பின்னணியில் விக்டோரியாவும் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன்படி நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் விக்டோரியா வரும் ஆஸ்திரேலியர்கள்(முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள்) மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள்  விடுதிகளில்/வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை. ...

Read More »

மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்டது

விக்டோரியா மிக நீண்ட காலம் முடக்க நிலையில் இருந்த நகர் என்ற பெயர் பெற்றிருக்கும் மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்ட அதே நாள், விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,189 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள். முன்னர் கணித்ததற்கு ஒரு வாரம் முன்னராகவே, அக்டோபர் 30ஆம் தேதி, விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதமாகும் என தற்போதைய கணிப்புகள் சொல்கின்றன. வெளி நாடுகளிலிருந்து நவம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர் ...

Read More »

இந்திய அழுத்தம் – மாகாண சபைத் தேர்தலுக்கு, இலங்கை ஆயத்தமா?

இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது. இலங்கை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு இந்தியத் தரப்பில் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு, இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலருக்கு, இலங்கையின் சில கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்திய அரசின் அழுத்தத்தால் தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவிக்கிறது. கிழக்கு, வடமத்திய ...

Read More »

மேடையில் ஏறி போப் ஆண்டவரிடம் தொப்பியை கேட்ட சிறுவன்

என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை சிறுவனிடம் கொடுத்தார். வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடியதை கண்டு பார்வையாளர்கள் திகைத்துப்போயினர். பின்னர், மீண்டும் போப் ...

Read More »

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த கலந்துரையாடல் இன்று!

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.இக்கலந்துரையாடலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பிலான அறிக்கைகளும் இதன்போது பரிசீலிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More »

விடுதலைப் புலிகளின் 14 முக்கியஸ்தர்களின் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது?

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் பிள்ளைகள் பலர் பலவந்தாகக் காணாமலாக்கப்பட்டதை பாராளுமன்றில் நேற்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இவ்வாறு காணாமலாக்கப்பட்ட 14 மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகள் தொடர்பான விபரங்களை சபை ஆவணப்படுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இது தொடர்பான தகவல்களை அவா் வெளியிட்டார். தம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில் ...

Read More »

13ஆவது திருத்தமும் புதிய யாப்பும்!

ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை முகாமில் நடந்த ஒரு வைபவத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.இது அரசாங்கம் அதன் யாப்புருவாக்க முயற்சியில் மெய்யாகவே ஈடுபடுகிறதா என்ற கேள்வியை மேலும் வலிமைப்பப்படுத்தியிருக்கிறது. யாப்புருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய யாப்புக்கான சட்ட வரைபை அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.அதை நம்பித்தான் சம்பந்தர் ...

Read More »

விக்டோரியாவில் 70 சதவீதமானோர் தடுப்பூசி முழுமையாகப் போட்டுவிட்டார்கள்

விக்டோரியா விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,332 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள். மெல்பன் நகரில் ஆறாவது தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள், இன்றிரவு 11:59ற்கு நிறைவுக்கு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து மாநிலம் வருவோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற செய்முறை அடுத்த வாரம் பரீட்சிக்கப்படத் தொடங்குகிறது. விக்டோரியா மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டு விட்டார்கள் என்று பிரதமர் Scott ...

Read More »