பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.இக்கலந்துரையாடலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பிலான அறிக்கைகளும் இதன்போது பரிசீலிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal