செய்திமுரசு

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்த்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீது மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் கும்பலால்  தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (03.11.2020) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாதிக்க பட்ட ஊடகவியலாளர்கள் ; சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், சி.தனஞ்சயன், செல்வி ருஜிக்கா, பார்த்தீபன், துஸ்யந்தி ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளார்கள். குறித்த வழக்கு ...

Read More »

நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மந்திரியாக நியமனம்

நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் பெண் மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் கடந்த மாதம் 17-ந் திகதி நடந்த பொது தேர்தலில் பெண் பிரதமர் ஜெசிந்தா அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார். அவர் நேற்று 5 புதிய மந்திரிகளை அறிவித்தார். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர் ஆவர். நியூசிலாந்து வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மந்திரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். 41 வயதாகும் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சென்னையில் கடந்த 1979-ம் ...

Read More »

அதிபர் தேர்தலுக்கு முன் வாக்களித்த 9.5 கோடி அமெரிக்கர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் 9.5 கோடி பேர் முன்பே வாக்களித்து விட்டனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இதற்கான தீவிர பிரசாரத்திலும் இருவரும் ஈடுபட்டனர். உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதி உள்ளது. ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வு

இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் 275 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 232 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரியவந் துள்ளது. ஏனைய 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 857 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 344 பேர் கொரோனா தொற்றிலிருந்து ...

Read More »

மூடநம்பிக்கை அமைச்சரானார் பவித்திரா வன்னியாராச்சி!

கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடவுளின் அருனை பெறுவதற்காக தான் மேற்கொண்ட செயலை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக ஆற்றுநீரில் பானையை வீசிய சுகாதார அமைச்சரின் செயல் குறித்து விமர்சனங்கள் கேலிசெய்யும் கருத்துக்களும் வெளியாகியுள்ளன. இதனை நியாயப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சர் கடவுளின் அருளை பெறுவதற்காகவே தான் அதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதேவேளை கடவுளின் அருளை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடதயராவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். உறுதியான பௌத்த பிரஜை என்ற அடிப்படையில் நான் பௌத்த போதனைகளையும் ...

Read More »

‘இருபது’ கரைசேர்ந்தது எப்படி?

20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம். அதற்கு முன்பு இந்த இருபது கரைசேர்ந்த விதம் தொடர்பான நமக்குக்க கிடைத்த சில இரகசியத் தகவல்களையும் நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம். வாகனத்தில் இருந்து இறங்கி பாதையைக் குறுக்கறுத்து முடிகின்ற நேரம், மெக்ஸ்.. மெக்ஸ்.. என்று ஒரு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தேன். அங்கே தனது வாகனத்தில் ...

Read More »

முன்னணியின் கொக்குவில் அலுவலகம் சிறிலங்கா காவல் துறையால் முற்றுகை

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகம் இன்று மாலை காவல் துறையால் முற்றுகையிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள் எதனையும் நடத்தக்கூடாது என அங்கு நின்ற முன்னணியின் உறுப்பினர்கள் காவல் துறையால் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு நினைவுகூருவதற்கு யாராவது முற்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல் துறையினர் எச்சரித்தனர். அதேவேளையில் முன்னணியின் அலுவலகத்தில் நின்ற செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் காவல் துறையால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

பாணந்துறை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள 100க்கும் அதிகமான திமிங்கிலங்கள்

பாணந்துறை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்களை காப்பாற்றுவதற்கான கடற்படையினர் உட்பட பல தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். பாணந்துறை கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன

Read More »

கொரோனா பாதிப்பை மறைத்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினை ரகசியமாக மறைத்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு உலக நாடுகளை கட்டியாண்ட இங்கிலாந்து நாடும் தப்பவில்லை.  இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  பின்னர் அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார். இதேபோன்று, இங்கிலாந்து அரச குடும்பமும் இதற்கு விதிவிலக்கில்லை.  இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகன் மற்றும் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ், கடந்த மார்ச் ...

Read More »

ஆஸ்திரேலியா: 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் புதிதாகக் கிருமித்தொற்று இல்லை

ஆஸ்திரேலியாவில், கடந்த 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் யாருக்கும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படவில்லை. ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாநிலத்தின் மெல்பர்ன் நகரில், முடக்கநிலை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அங்கு உணவகங்களிலும் மதுபானக் கூடங்களிலும் திரண்டுள்ளனர். விக்டோரியா மாநிலத்தில், 60 பேருக்கு இன்னும் கிருமித்தொற்று உள்ளது. அவர்களில் ஒருவருக்கு எவ்வாறு கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

Read More »