அடிப்படைவாதச் செயற்பாடுகள் தொடர்பாகச் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்படி, பொலிஸ் அதிகாரியல்லாத எவரேனும் ஒருவரிடம் சரணடையும் ஒருவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் 24 மணித்தியாலங்களுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். விசாரணை நடத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்பதைப் பரிசீலிப்பதற்காக, அந்தப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அமைச்சருக்கு ...
Read More »செய்திமுரசு
தாயின் பசி
ஐ.நா வது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் டைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல. எனது படம் ஆகிய Quo Vadis Aida ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித ...
Read More »பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு தீர்ப்பாயம் உள்துறை அமைச்சரிற்கு உத்தரவு
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2000 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது. தமிழீழ ...
Read More »இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (13.02.2021)காலை 9.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழில் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் ...
Read More »13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டமைக்கான இலக்குகள் இதுவரையில் அடையப்படவில்லை
கடந்த கால கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதோடு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான இலக்குகள் அடையப்படவில்லை. இந்நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் அட்மிரல். பேராசிரியர் .ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொட விரைவில் பொறுப்பேற்கவுள்ளதோடு, அமைச்சரவை அந்தஸ்துடன் அவர் செல்ல வேண்டுமென ஜனாதிபதியே அதிக விருப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேட செவ்வியின் போது 13ஆவது திருத்தச்சட்டம், இந்தியாவுக்கான தூதுவர் மற்றும் சீனாவின் ஒரேபட்டி ஒரே பாதை திட்டத்தில் பங்கேற்றுள்ளமை தொடர்பில் ...
Read More »தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள்
இலங்கையில் இதுவரை காலமும் முதலாவது சிறுபான்மை இனமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 11.03.2021 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் ; இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் சனத்தொகை பெருக்க வீதம் ...
Read More »சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தவேண்டும்
தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயயுடனான இன்றைய சந்திப்பின்போது வலியுறுத்ததப்பட்டதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கிறோம். ஆனால் அதன்வழியான 13 ம் திருத்தச்சட்டமூலத்தை தீர்வாக ஏற்க முடியாது . தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு ...
Read More »கடல் கடந்த தடுப்பு முகாம்களை மூடுங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு சீனா வலியுறுத்தல்
ஆஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களின் செயல்பாடு குறித்து கவலைத் தெரிவித்துள்ள சீனா, அம்முகாம்களை உடனடியாக மூடக்கோரி வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சீன நிறுவனமான ஹூவாயின் 5G தொலைத்தொடர்பை சேவையை வெளிப்படையாக ஆஸ்திரேலிய அரசு தடைசெய்ததை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் சீனா இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்றின் மூலத்தைக் குறித்து அறிய விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய வலியுறுத்தியதும் ஆஸ்திரேலியா- சீனா உறவைப் பாதித்தாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், ...
Read More »மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் சந்திப்பு பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வேளையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக ...
Read More »மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் இக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்தேறிய இனவழிப்புக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் ...
Read More »