மன்னார் மனிதப் புதைக்குழியில் மேற்கொள்ளப்பட்டுவந்த அகழ்வுப் பணிகளை, மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்துமாறு, மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று (08) உத்தரவிட்டுள்ளார். குறித்த புதைக்குழியிலிருந்து, அகழ்வின் மூலம் பெறப்பட்ட மனித எச்சங்களின் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, மன்னார் நீதிமன்றம் நேற்று (07) அறிவித்ததையடுத்தே, அகழ்வுப் பணியாளர்களுக்கு, இன்றைய தினம் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More »செய்திமுரசு
மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்!-கோட்டாபய ராஜபக்ஷ
* அதிகாரப் பகிர்வு தேவையில்லை * சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை * 11 இளைஞர்கள் விவகாரம்: விசாரணை நடத்தவே உத்தரவிட்டிருந்தேன் * சுமார் 17,500 முன்னாள் போராளிகளை விடுவித்துள்ளோம் * பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியே, தமிழ் மக்களுக்கான விடிவு நேர்காணல்: மேனகா மூக்காண்டி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கின்றது. அதனால் அதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் கடமை எனக்கு இருக்கின்றதென நம்புகிறேன். அதனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நான் வருவேனென, பாதுகாப்பு ...
Read More »வடகொரியா ராக்கெட் ஏவுதளத்தை சீரமைக்கிறது!
வடகொரியா அரசு ராக்கெட் ஏவுதளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக வெளியான செய்தியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அணு ஆயுதங்களை கைவிடுதல், பொருளாதார தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வடகொரியா தனது ...
Read More »நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க ஒத்துழைப்பு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முதலில் யோசனை கொண்டு வந்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
Read More »சிறிலங்கா கடற்படையினரால் இன்று 30 பேர் கைது!
சட்டவிரோதமான முறையில், இலங்கையில் இருந்து இடம்பெயர முயற்சித்த 30 பேர் சிறிலங்கா கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தென் கடற்பரப்பில் 80 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் இருந்த குழுவினர் இன்று அதிகலை கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது. தெற்கு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் கடற்படை படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
Read More »ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு!
இலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான மகிந்த ராஜபக்ச ஆகியோர் வருட இறுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களது கட்சிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது பற்றியும் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களுடனான சந்திப்பொன்றின்போது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ...
Read More »இரண்டு இலட்சம் கையொப்பங்களை பெற்ற ஈழத்தம்பதி!
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் இணைய மனுவொன்றில் இதுவரையில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கையொப்பமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் இருந்து கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் புகலிட கோரிய நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளான கோபிகா, தருணிக்கா ஆகியோரை குடிவரவுத் துறை அதிகாரிகள் நாடுகடத்துவதற்காக கொண்டு சென்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்பட இருந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் பகுதியை சேர்ந்த மக்கள் ...
Read More »ஆஸ்திரேலியாவில் பெண் மருத்துவர் படுகொலை!
ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிணத்தை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் பிரீத்தி ரெட்டி (32). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 3-ஆம் திகதி செயின்ட் லியோனார்ட்ஸ் என்ற இடத்தில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் பல ...
Read More »யாழில் சமாதான நீதவானின் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல்!
யாழ்ப்பாணம், மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (06) அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கொடாரிகளால் வீடொன்றின் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரி காவல் துறை மற்றும் 119 அவசரகாவல் துறைக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல் துறை உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சமாதான நீதவான் ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் ...
Read More »முகமூடிக் கும்பல் வீடு புகுந்து தாக்குதல்!
முகங்களை மூடிய மூன்று பேர் வீடொன்றில் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் வீட்டுக்கு வெளியே இருந்த முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன், மூதாட்டி ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
Read More »