இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் ...
Read More »செய்திமுரசு
வடகொரியா அதிபரின் மரண மர்மம்…….!
ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வட கொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்படுபவர். உலகின் உண்மையான இரும்புத்திரை நாடு இப்போது மட்டு மல்ல, எப்போதுமே வடகொரியாதான். சீனாவிலிருந்து, கூட ரகசியங்களை கறந்துவிடலாம். ஆனால், வடகொரியாவில் காளை மாட்டிலிருந்து பால் கறந்த கதைதான்! இந்தக் குட்டி நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உலக மக்களால் அறிந்துகொள்ளவே முடியாது. கொரோனா அங்கே பரவியிருக்கிறதா ; இல்லையா ...
Read More »இன வன்முறைக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை!
மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த இரு மாணவியர்களுக்கு எதிராக இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியப்பெண்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக ஆஸ்திரேலிய அதிகாரிகளை மலேசிய சீனர் சங்கம் பாராட்டியது. ம.சீ.ச. பொதுச்செயலாளர் டத்தோ சோங் சின் வூன், அதிகாரிகள் விரைவில் பெரிய குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 ஐ பரப்புவதற்கு ஆசியர்கள்தான் காரணம் என்ற தவ்றான புரிதலில் இனவெறி தாக்குதல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான புரிதலால் ,மலேசிய, சிங்கப்பூர் இளங்கலை பட்டதாரிகள் இருவரை ...
Read More »சிறிலங்கா எதிர்க்கட்சிகளின் தீர்மானங்கள்!
பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக பத்து அம்சக் கோரிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையொப்பமிட தீர்மானித்துள்ள நிலையில்,மக்கள் விடுதலை முன்னணி கையொப்பமிட மறுப்பு தெரிவித்து வருகின்றது. எனினும் கையொப்பமிடப்பட்ட பத்து அம்சக் கோரிக்கை இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமெனவும், அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்காவிடாது எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை ...
Read More »கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை ஆக்கிரமித்த விமானப்படை !
கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படையின் முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப்படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத் தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு அவரது அனுமதியுடன் பாடசாலையினை தங்களின் தேவைக்கு பெற்றுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலையினை சூழவும், கிராமத்திலும் பொது மக்கள் நெருக்கமாக ...
Read More »கொரோனாவைத் தடுக்குமா பி.சி.ஜி. தடுப்பூசி?
பி.சி.ஜி. காசநோயைத் தடுப்பதற்குப் போடப்படும் பிரதான தடுப்பூசி. இது குழந்தைகளுக்கு ஏற்படும் பலதரப்பட்ட வைரஸ் நோய்கள், சுவாசக் கோளாறுகள், மூளைக்காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றையும் தடுக்கும். உடலின் தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி பொது ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துவருவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இவை எல்லாமே ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ள விஷயங்கள். ஆனாலும், இது வயது வந்தவர்களுக்குக் காசநோய் ஏற்படுவதைத் தடுப்பதில்லை என்பது இதில் உள்ள பெருங்குறை. இந்தச் சூழலில் கரோனா நோயை பி.சி.ஜி. தடுப்பூசி தடுக்கிறது என்று சொல்வதற்கு என்ன காரணம்? ...
Read More »மூளைச்சாவு அடைந்துவிட்டாரா வடகொரிய அதிபர் கிம்?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சைக்குப்பின் உணர்வற்று, மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்கு மருத்து ஆலோசனை வழங்க மருத்துவ வல்லுநர்கள் குழுவை சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன அதேசமயம், கடந்த வாரத்திலிருந்து அதிபர் கிம் ஜாங் ஓய்வெடுக்கும் வோன்சான் நகரில் உள்ள மாளிகை வளாகத்தில் அவர் பயன்படுத்தும் பிரத்யேக ரயில் தயாராக இருப்பதாக ெசயற்கக்கைக்கோள் புகைப்படம் தெரிவிக்கிறது. அதிபர் கிம் உடல்நிலை குறித்து தொடர்ந்து ஆதாரமற்ற செய்திகள் வருவதால் எதையும் உறுதி செய்யமுடியவில்லை. வட கொரியா அதிபர் கிம் ...
Read More »கொரோனா தாக்கம்: ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் அகதிகள்!
ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு, அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் வாழ்வை கடுமையாக பாதித்திருக்கின்றது. அகதிகள் சார்ந்து இயங்கும் தொண்டு அமைப்பிடம் உதவிக்கோரி வரும் தொலைப்பேசி அழைப்புகள் ஆறு மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில்(Bridging Visas) உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலைகளை இழந்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் வீடற்றவர்களாக மாறக்கூடும் எனக் கூறப்படுகின்றது. “ஒரு நாளைக்கு 40- 60 அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்தவர்கள்,” எனக் ...
Read More »யாழ் மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் சடலம் மீட்பு!
ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை சிறிலங்கா காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இனம் காணப்பட்டுள்ளது.குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் சிறிலங்கா காவல் துறையால் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி – திணறும் அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, 29 லட்சத்து 20 ஆயிரத்து 738 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ...
Read More »