மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த இரு மாணவியர்களுக்கு எதிராக இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியப்பெண்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக ஆஸ்திரேலிய அதிகாரிகளை மலேசிய சீனர் சங்கம் பாராட்டியது.
ம.சீ.ச. பொதுச்செயலாளர் டத்தோ சோங் சின் வூன், அதிகாரிகள் விரைவில் பெரிய குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 ஐ பரப்புவதற்கு ஆசியர்கள்தான் காரணம் என்ற தவ்றான புரிதலில் இனவெறி தாக்குதல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான புரிதலால் ,மலேசிய, சிங்கப்பூர் இளங்கலை பட்டதாரிகள் இருவரை ஆஸ்திரேலியப் பெண்கள் தாக்கிய வீடியோ பதிவு வைரலாகியது.
மெல்பர்னில் நடந்த இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் இனரீதியான வெறுக்கத்தக்க குற்றங்கள் என்று கூறுவதாக இருந்தது.
ஆசிய பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பிற்காக கவலைப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
கவலையைப் போக்க ஆஸ்திரேலிய வின் ஆண்ட்ரூ கோல்ட் ஜினோவ்ஸ்கியின் பார்வைக்கு சோங் ஒரு கடிதம் எழுதினார், இந்த விவகாரம், இரு நாடுகள் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்தார்.
அதற்கான பதிலும் விரைவாகக் கிடைத்தாக சொங் கூறினார். தாக்குதல் நடத்தியவர் மீது விரைவான, கடுமையான நடவடிக்கை எடுத்த ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
குற்றம் புரிந்தவர் அடையாளம் காணப்பட்டார், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார், என்று அவர் கூறினார், மற்ற தாக்குதல் செய்பவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று ஆண்ட்ரூ தெரிவித்ததை சோங் கூறினார்.
சட்ட விதிகளைப் பின்பற்றுவதற்கும், சொந்த குடிமக்கள் என்ற போதும் தவழறிழைத்தவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுப்பதற்கும் ஆஸ்திரேலிய அதிகாரிகளை எம்.சி.ஏ. பாராட்டியது.