.யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரும் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவரும் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தனர். இதனால் யாழ்.மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 என்றும் வடக்கு ...
Read More »செய்திமுரசு
ரஞ்சன்ராமநாயக்க சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தாரா?
ரஞ்சன் ராமநாயக்க தான் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன்ராமநாயக்க சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தார் என ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன எனினும் முகநூல் பதிவொன்றில் அவர் இதனை நிராகரித்துள்ளார்.
Read More »இந்து கடவுளை சித்தரித்து அவுஸ்திரேலியாவில் வெளியான கேலிச்சித்திரம்
அவுஸ்திரேலியாவில் நாளிதழொன்றில் வெளியான கேலிச்சித்திரமொன்று இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும், இது தொடர்பில் குறித்த ஊடகம் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் இந்நாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph-இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரையிலேயே குறித்த கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது. இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரம் அமைந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன்,கேலிச்சித்திரம் தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலாச்சார சமூகங்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் எந்தவொரு நம்பிக்கையையும், ...
Read More »இனவழிப்புக்கு உள்ளான ஆர்மேனியர்கள் – அமெரிக்காவின் அங்கீகாரம்
சரியாக 106 வருடங்களுக்கு பின்பு ஆர்மேனிய மக்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு ஓட்டோமான் பேரரசினால் இடம் பெற்ற தாக்குதல்கள் ‘இனப்படுகொலை’ தான் என்று முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியொருவர் இந்த விடயத்தினை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமும் இதுதான். அமெரிக்கா வழங்கியுள்ள இந்த இனஅழிப்பு அங்கீகாரம் துருக்கியின் உள்நாட்டு அரசியலை ஒரு உலுக்கு உலுக்கி விடும் நோக்கம் கொண்டதே தவிர ஆர்மேனிய மக்களின் நலன் குறித்த எந்த விவகாரத்திற்கும் பெரிதாக பயன்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள். ...
Read More »அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கை அழைத்து வர திட்டம்?
இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலங்கை அல்லது மாலைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடர்பில் இன்று தகவல் வௌியானது. அவுஸ்திரேலியா ஏற்கனவே இந்தியாவில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க 15 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது. IPL கிரிக்கெட் தொடரில் 23 அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஏற்கனவே மைக் ஹசீயிற்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பில் கலந்துகொண்ட வேறு நாடுகளின் வீரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு ...
Read More »கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி
உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது. அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு மரணமானார். வடமராட்சி பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறிய வருவதாவது; உயிரிழந்த நபர் கடந்த ஞாயிற்றுக் கிழமை சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வலிப்பு வந்ததால் அவர் கொதித்துக் கொண்டிருந்த கறிச் சட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். சக ...
Read More »சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை கொன்றிருக்க வேண்டுமா?
சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை மஹிந்த அரசாங்கம் விடுவிக்கும் போது ஏன் அதனை சரத் பொன்சேகா எதிர்க்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பிய நிலையில், அப்படியாயின் அவர்கள் அனைவரையும் கொன்றிருக்க வேண்டும் என்பதா? சரத் வீரசேகரவின் நிலைப்பாடு என்று சரத் பொன்சேகா பதில் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் கொவிட் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தின் போது, மிருசுவில் கொலைச் சம்பவம் தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவின் ...
Read More »ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
மாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவில் ஏழு குழந்தைகள் உள்ளன என்று டாக்டர்கள் கூறிய நிலையில், 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் உருவாவதுண்டு. அதையும் மீறி சில நேரங்களில் மூன்று, நான்கு கூட உண்டாகும். அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பதில்லை. அபூர்வமாக நான்கு குழந்தைகளுக்கு மேலும் உருவாகும் நிகழ்வும் நடந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த பெண்ணிற்கு ஒரு கருவில் 9 குழந்தைகள் உருவாகி, தற்போது அறுவை சிகிச்சை மூலம் 9 குழந்தைகளையும் ...
Read More »பெ.சு.மணி: தமிழ்த் திறனாய்வுலகின் பொக்கிஷம்
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துக்கு வெளியே அறிவு மரபே கிடையாது என்று உலவிவந்த மாயையை உடைத்த பெரியார், ம.பொ.சிவஞானம், ஜீவா, மயிலை சீனி. வேங்கடசாமி, மு.கருணாநிதி வரிசையில் வருபவர் பெ.சு.மணி (1933-2021). எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்த பெ.சு.மணியின் நூல்களெல்லாம் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உயர் படிக்கட்டுகளாக இருக்கின்றன. தனது ஆய்வுப் பணிக்காக மீனம்பாக்கம் அஞ்சலகத் துறையில் அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு வேலையை மாற்றிக்கொண்டு, தனது சைக்கிளில் பகற்பொழுது முழுவதும் சென்னை நூலகங்களில் கிடையாகக் கிடந்து தேனீபோலச் சேகரித்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். இன்றுபோல் எந்த ...
Read More »‘ஆஸி. பிரதமரே! உங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது’
ஐபிஎல் டி20 தொடரில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வந்த ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாடர், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பைப் பார்த்து, பயோ-பபுளில் இருந்து விலகி மாலத்தீவு சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய குடிமகன்கள் யாரும் மே 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது என பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார். விமானச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்துதானே விமானங்கள் வரக்கூடாது, ஆஸ்திரேலியர்கள் வரக்கூடாது, மாலத்தீவிலிருந்து வரலாமே என்பதால், மைக்கேல் ஸ்லாடர் மாலத்தீவு சென்றதாக ஆஸ்திேரலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
Read More »