கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி

உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.

அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு மரணமானார்.
வடமராட்சி பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் அறிய வருவதாவது;
உயிரிழந்த நபர் கடந்த ஞாயிற்றுக் கிழமை சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வலிப்பு
வந்ததால் அவர் கொதித்துக் கொண்டிருந்த கறிச் சட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை மரணமானார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ச. சிவராசா நடத்தினார்.