செய்திமுரசு

117 நாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைப்பதில் காலதாமதம் ஏற்படும்

கொவிட் -19 தாக்கத்தை அடுத்து 117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும், எனினும் சற்று காலதாமதமாகும் என்கிறது அரசாங்கம். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று(25) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பதிரன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள ...

Read More »

நியூசிலாந்திலிருந்து 88 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

கொரோனா நெருக்கடி காரணமாக நியூசிலாந்தில் சிக்கித்தவித்த 88 இலங்கையர்கள் நேற்று(25) பாதுகாப்பாக நாடு திரும்பினர். நியூசிலாந்தின் வெலிங்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த குறித்த பயணிகள் சில்க் ;எயாரின் விசேட விமானம் மூலம் நேற்று  மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

Read More »

இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது. 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு 24 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது. அங்குள்ள எச்-9 பகுதியில் 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மால்கி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோவில் கட்டப்படுகிறது. கோவிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் ...

Read More »

2023 பெண்கள் உலககோப்பை கால்பந்து – போட்டி நடத்தும் உரிமையை பெற்றன ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இதுதொடர்பாக நேற்று சூரிச்சில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. உலகக் கோப்பையை நடத்தும் அணிகளை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்று நியூசிலாந்து அணிகளுக்கு ஆதரவாக ...

Read More »

‘மலையக மக்கள் முன்னணியை விட்டுக்கொடுக்க மாட்டேன்’

தனது தந்தையின் எண்ணக்கருவில் உதித்த மலையக மக்கள் முன்னணியானது, எனது கருவிலேயே விதைக்கப்பட்ட கட்சி. ஆகவே, ஒருபோதும் இதை நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். வெற்றிபெற்ற அடுத்த நிமிடம் மலையக மக்கள் முன்னணி எனது கைகளுக்கு வரும். மலையக மக்கள் முன்னணியை மீண்டும் சரியான முறையில் எனது தந்தையின் கொள்கைக்கு ஏற்றவாறு மீளக் கட்டியெழுப்புவேன்” என, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் அமரர் பெரியசாமி சந்திரசேகரின் புதல்வியும் நுவரெலியா மாவட்டத்தில் இலக்கம் 4 கோடரிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.  விசேட ...

Read More »

சொந்த மகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்ற சட்டப் போராட்டம் நடத்தும் தந்தை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சொந்த மகளை குடியிருப்பில் இருங்து வெளியேற்ற தந்தை ஒருவர் 8 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். மகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் பொருட்டு, அந்த தந்தை இதுவரை சுமார் 70,000 டொலர்கள் செலவிட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 84 வயதான பீற்றர் கிரண்டி, எஞ்சிய தமது காலத்தை முதியோர் இல்லத்தில் செலவிட திட்டமிட்டுள்ளார். அரசு சார்ந்த ஓய்வூதியம் பெறும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் முதியோர் காப்பகத்திற்கான செலவுகளை இவரே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ...

Read More »

ரவிராஜின் 58 ஆவது ஜனனதினத்தில் ரவிராஜ் பற்றிய கண்ணோட்டம்

பரந்துபட்ட இவ்வுலகில் மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது நியதியாகும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தாம் இறந்த பின்பும் மக்களின் மனதில் நிலைத்து இவ்வுலகில் என்றும் வாழ்வார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மரணம் என்றும் வென்றுவிட முடியாது. அந்த வரிசையில் மிக முக்கியமானவர் தமிழ் மக்களின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலித்து இறுதியில் தமிழ் மக்களின் நீதிக்காக தன் உயிரையும் தியாகம் செய்த “மாமனிதர் நடராஜா ரவிராஜ்” அவர்கள் அந்த வகையில் மாமனிதரின் சில குறிப்புகளையும் அவர் இறந்த ...

Read More »

தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்பு

தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட ...

Read More »

லசந்தவின் மகளின் கடிதத்தினை அரசமைப்பு பேரவை கவனத்தில்எடுத்துள்ளது

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க பொலிஸ் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தினை அரசமைப்பு பேரவை கருத்திலெடுத்துள்ளது. அரசமைப்பு பேரவையின் தலைவரான கருஜெயசூரிய குறிப்பிட்ட கடிதம் குறித்து பேரவையின் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. இந்த கடிதம் குறித்து கருத்துக்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ள அரசமைப்பு பேரவை குறிப்பிட்ட கடிதம் குறித்த பொலிஸ் ஆணைக்குழுவின் பதில் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. சிஐடியின் புதிய இயக்குநர் தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க சமீபத்தில் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். ...

Read More »

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – விசாரிக்க இடைக்கால தடை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவிற்கு எதிரான விசாரணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கொழும்பு உயர்நீதிமன்றம் டிரையல் அட் பார் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின்னரே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More »