முடக்க நிலை அறிவிக்கப்பட்ட சிட்னி பெரு நகர் பகுதியில் வசிப்பவர்கள் அவர்களது உள்ளூராட்சிப் பகுதிகளில் மட்டும் அல்லது, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியும். உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தை கீழே உள்ள வரை படத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Read More »செய்திமுரசு
காபுல் விமானநிலையத்திலிருந்து பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நான் எவ்வாறு தப்பினேன்?
தலிபான் காபுலை கைப்பற்றிய தினம், ஜேர்மனியிலிருந்து நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்புடன் ஆரம்பமானது. ஜேர்மன் தூதுரகத்தின் பணியாளர்களுடன் அந்த நாட்டின் விமானமொன்று புறப்படவுள்ளதால் என்னை விமானநிலையத்திற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆப்கானிலிருந்து ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்படவேண்டியவர்களின் பட்டியலில் அவர் எனது பெயரை பதிவு செய்தார்.நான் ஜேர்மன் ஊடகத்திற்காக பணியாற்றியிருந்தேன்.கடந்த ஒரு வருடகாலமாக நான் விசாவை பெறுவற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன. எனக்கு சிந்திப்பதற்கான நேரம் இருக்கவில்லை,நான் எனக்கு உயிர்தப்புவதற்கான சந்தர்ப்பம் என நினைத்தேன்,நான் உடலில் டட்டுக்கள் பொறித்த வெளிப்படையான பத்திரிகையாளன்- இவை தலிபான் பின்பற்றும் கொள்கைகளிற்கு ...
Read More »‘சண்டே ஐலண்ட்’ ஆசிரியர் கொவிட் தொற்றால் காலமானார்
சண்டே ஐலன்ட் தலைமை ஆசிரியர் சுரோஷ் பெரேரா நேற்று(18) காலமானார். கொவிட் -19 வைரஸால் பாதிப்புற்று களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். 80களின் நடுப்பகுதியில் ஐலண்ட் செய்திப் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து கொண்ட சுரேஷ் பெரேரா அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற செய்தியாளராகவும் பணியாற்றினார். குறித்த பத்திரிகையின் ஆசிரியர் பீட பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றிய போது இவர் அலுவலகம் வந்து பணியாற்றி இருந்ததாகவும் கொவிட் தடுப்பூசி பெற்றிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இறக்கும் போது வயது ...
Read More »ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர் காணப்படலாம்
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு மாறானது என அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர். கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். சமூகத்தில் இவ்வைரஸானது பரவியுள்ளதாகவும், கொரோனா நோயாளிகள் தற்போது சுதந்திரமாக சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர் தெரிவித்தார். தனிநபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து உள்ள நிலையில், உண்மையான ...
Read More »அவுஸ்ரேலிய பல்பொருள் அங்காடியினுள் தீடிரெனத் தென்பட்ட மலைப்பாம்பு!
அவுஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள வூல்வொர்த்ஸ் பல்பொருள் அங்காட்டியில் பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியிலிருந்து 3 மீற்றர் நீளம் கொண்ட விசமற்ற மலைப்பாம்பு ஒன்று வெளியேறியது. குறித்த பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் திருமதி அலதி என்ற பணியாளர் சக பணியாளர்களை எச்சரித்துவிட்டு குறித்த சம்பவத்தைப் படம் பிடித்தார். பின்னர் அவர் வீடு சென்று பாம்பைப் பிடிப்பதற்கான பை எடுத்து வந்து பாம்பைப் பிடித்தார். பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள புதர்பகுதியில் அப்பாம்பை விடுவித்தார்.
Read More »தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?
தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும் இப்போதைக்குப் பாதிக்கப் போவதில்லை. தலிபான்கள், இவ்வளவு விரைவாக முழு நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார்கள் என, அமெரிக்கத் தலைவர்கள் நினைக்கவில்லை போலும்! கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்துகளால் அது விளங்குகிறது. அவர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, “செப்டெம்பர் 11ஆம் திகதிக்கு முன்னர், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் ...
Read More »பொருள்களை சேமித்து கொள்ளுமாறு எச்சரிக்கை
வௌ்ளிக்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இரண்டு கிழமைகளுக்கு நாட்டில் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து நாட்டை முடக்குவோம் என எச்சரித்துள்ள ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள், தேவையான பொருள்களை சேமித்து கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களே இந்த அறிவிப்பை விடுத்துள்ளன. அதனடிப்படையில், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு கூட்டணி அறிவித்துள்ளது. ...
Read More »முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் மரணம்
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளரான ஊடக வித்தகர் கலாபூசணம் முபீதா உஸ்மான் தனது 74ஆவது வயதில் காலமானார்.நேற்று செவ்வாய்க்கிழமை (17) திடீரெனெ நோய்வாய்ப்பட்ட அவர், சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இரவு மரணமடைந்துள்ளார். அன்டிஜன் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். தலைநகர் கொழும்பை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட முபீதா உஸ்மான், 55 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார். ...
Read More »ஒரே ஒருவருக்கு கொரோனா- நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து
நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு அதனை கட்டுக்குள் கொண்டுவந்த சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. வெறும் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம், வைரஸ் பரவலை வெகு விரைவாக கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவுக்கு 26 ...
Read More »சோதனை செய்வதையும் தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்க அழைப்பு
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 452 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 50 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள். தொற்றுக்குள்ளாகுபவர்களில் 70 சதவீதத்தினர் 40 வயதிற்குட்பட்டவர்கள். வயது எழுபதுகளிலுள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பெண் ஒருவர் இறந்துள்ளார். Lennox Head பகுதி கழிவு நீர் சோதனையில் Covid-19 கூறுகள் கண்டறியப்பட்டதால், அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் Covid சோதனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Premier Gladys Berejiklian அழைப்பு விடுத்துள்ளார்.
Read More »