சண்டே ஐலன்ட் தலைமை ஆசிரியர் சுரோஷ் பெரேரா நேற்று(18) காலமானார்.
கொவிட் -19 வைரஸால் பாதிப்புற்று களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
80களின் நடுப்பகுதியில் ஐலண்ட் செய்திப் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து கொண்ட சுரேஷ் பெரேரா அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற செய்தியாளராகவும் பணியாற்றினார்.
குறித்த பத்திரிகையின் ஆசிரியர் பீட பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றிய போது இவர் அலுவலகம் வந்து பணியாற்றி இருந்ததாகவும் கொவிட் தடுப்பூசி பெற்றிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இறக்கும் போது வயது 59 ஆகும்.
Eelamurasu Australia Online News Portal