அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களே இந்த அறிவிப்பை விடுத்துள்ளன.
அதனடிப்படையில், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு கூட்டணி அறிவித்துள்ளது.
நாட்டை தொடர்ச்சியாக 10 நாள்களுக்கு மூடும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக, அந்த கூட்டணியின் ஒழுங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வௌ்ளிக்கிழமை முதல் நாட்டை முடங்குவதற்கு அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கவில்லை என்னில், 23ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 10 நாள்களுக்கு தேவையான பொருள்களை கொள்வனவு செய்துகொண்டு வீடுகளிலிலேயே இருக்கவேண்டும் என்றும் மக்களிடத்தில் அவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.