ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு செய்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த காட்டுத்தீயால் அங்கு கடும் வெயில் வாட்டி ...
Read More »செய்திமுரசு
கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 நாடாளுமன்ற தேர்தல் !
பி.கே.பாலசந்திரன் – முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார். மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு ...
Read More »விமானத்தில் பயணித்த அனைவரும் பலி!
ஈரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தெஹ்ரான் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரேன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்ட விமானமே சிறிது நேரத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது விமானத்தில் 170 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்துள்ளதாக தெஹ்ரான் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ...
Read More »சர்வதேச மொழித் திறமை மேம்பாட்டுக்காக புதிய பல்கலைக்கழகம்!
மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார். தொழில் சந்தையை கருத்திற் கொண்டு இளைஞர்களிடையே சர்வதேச மொழி வல்லுனர்களை உருவாக்குவதே இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் சிங்கள அகராதி அலுவலகத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றி அதனை அரசாங்க பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்ததாக செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More »‘கஜபா’க்களின் காலம்!
இந்தியா புதிதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (கூட்டுப்படைகளின் தளபதி) என்ற பதவியை கடந்த ஜனவரி 1ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது. இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பாரிய போர்களை நடத்தியிருந்த போதிலும், கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னரே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச அளவில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிகள் மட்டத்தில் நடந்து வந்த சந்திப்புகள், கூட்டங்களில், பெரும்பாலும் இந்தியா ...
Read More »பழிவாங்குவோம்- சொலைமானியின் உடலின் மீது விழுந்து கதறியழுது புதிய தளபதி சபதம்!
அமெரிக்க தாக்குதலில் ஈரானிய தளபதி கசேம் சொலைமானி கொல்லப்பட்ட பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் கானி சொலைமானியின் கொலைக்கு பழிவாங்கப்போவதாக சூளுரைத்துள்ளார். கொல்லப்பட்ட ஈரானிய இராணுவ அதிகாரியின் இறுதிநிகழ்வுகள் இன்று இடம்பெற்றவேளை அவரது பிரேதப்பெட்டியின் மேல் விழுந்து கதறியழுத கானி சொலைமானி வீரமரணமடையச்செய்யப்பட்டமைக்கான பழிவாங்கல் இடம்பெறும் என்பது இறைவனிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என தெரிவித்துள்ளார். சொலைமானியின் பாதையைஅதே வலிமையுடன்தொடர்வதற்கு நாங்கள் உறுதி தெரிவிக்கின்றோம், என குறிப்பிட்டுள்ள கானி அமெரிக்காவை பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் பல நடவடிக்கைகள் மூலம் ...
Read More »அவுஸ்திரேலியாவில் மழை பெய்தபோதும் பாரிய காட்டுத் தீ அச்சுறுத்தல்!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி வரும் பிராந்தியங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருவ கால மழைவீழ்ச்சி இடம்பெற்றதால் அந்தப் பிராந்தியங்களிலான வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிட்னி நகர் முதல் மெல்போர்ன் நகர் வரையான கிழக்குக் கடற்கரை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தின் சில பகுதிகள் என்பனவற்றிலேயே மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனினும் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் வெப்பநிலை மீண் டும் அதிகளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப் பட்டுள்ளது. இதன் பிரகாரம் விக்டோரியா மற்றும் சவுத் வேல் ஸில் மேலும் பாரிய காட்டுத் தீ ...
Read More »அவுஸ்திரேலிய பிரதமருடன் துயர் பகிர்ந்த கோத்தா !
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று (07) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். வருடத்தில் இக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுகின்றமை ஒரு சாதாரண நிகழ்வாயினும் தற்போது பரவியுள்ள காட்டுத் தீ முன்னொருபோதும் இல்லாதவாறு உக்கிரமானதாக காணப்படுகின்றது. இந்த பயங்கர காட்டுத்தீயினால் தற்போது சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் மீட்புப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்துள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சமாக கணக்கிடப்பட்டுள்ள ...
Read More »தேர்தல் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை!
ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதன் காரண மாக, எதிர்வரக்கூடிய தேர்தல்களின் போது பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சில கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவை குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கும், அரச சேவை ...
Read More »பலமான நாடாளுமன்றம் தேவைப்படுகிறது!
இந்த நாட்டை சிறந்ததொரு நிலைக்கு கட்டியெழுப்ப ஒரு பலமான பாராளுமன்றம் தேவைப்படுகின்றது. புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வரவு, செலவுத்திட்டத்தை முன் வைத்து அதனூடாக நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கடந்த 5ஆம் திகதி பின்னவல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்; கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை வெற்றிபெற செய்த அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் ...
Read More »