ஈரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் தெஹ்ரான் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரேன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்ட விமானமே சிறிது நேரத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின்போது விமானத்தில் 170 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்துள்ளதாக தெஹ்ரான் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ள அதிகாரிகள் விபத்துக்குள்ளான இடத்துக்கு தீயணைப்பு குழுவினரை மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளனர்.

Eelamurasu Australia Online News Portal