செய்திமுரசு

அமேசான் நில சீர்திருத்த சட்டமூலம் குறித்து இங்கிலாந்து பிரேஸிலுக்கு எச்சரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள நில சீர்திருத்த சட்டமூலம் தொடர்பில் 40 இங்கிலாந்து உணவு வணிகங்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குழுவின் ஒரு திறந்த கடிதம், பொது நிலத்தின் தனியார் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கக்கூடிய ஒரு சட்டமூலத்தை நிராகரிக்க பிரேஸிலின் சட்டமன்றத்தை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சட்டமூலம் அமேசானில் காடழிப்பை துரிதப்படுத்தக்கூடும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்புகளை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரேஸில் உறுதியளித்த சில மாதங்களிலேயே இந்த சட்டமூலம் அங்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு செனட்டில் புதன் அல்லது வியாழக்கிழமைக்கு பின்னர் நடத்தப்படும் என்று ...

Read More »

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள்

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. மக்களின் கருத்துச்சுதந்திரத்தை, குறிப்பாக ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் ...

Read More »

கொடிகாமம் பகுதியில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டன

யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ ...

Read More »

மம்தா: வங்க மகளின் வெற்றி

வங்கத்தில் மிகப் பெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறார் மம்தா. எப்படியாவது வங்கத்தைக் கைப்பற்றிவிடும் நோக்கத்தில் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் என்று பாஜகவின் பெருந்தலைகளெல்லாம் வங்கத்தில் வந்து குவிந்தனர். இன்னொரு புறம், இடதுசாரிகளும் காங்கிரஸும் ஐஎஸ்எஃபும் அமைத்த கூட்டணியின் வாக்குப் பிரிப்பானது மம்தாவையே பாதிக்கும் என்று கூறப்பட்டது. இவர்களுக்கெல்லாம் எதிர்முனையில் இருந்தவர் ஒரே ஒரு பெண். அதுவும் சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செய்யும் பெண்! வங்கத் தேர்தல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ...

Read More »

சட்டமன்ற திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற திமுக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 133 பேர் வெற்றி பெற்றார்கள். இதில் 8 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். இன்று இரவு 7 மணியளவில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ...

Read More »

வவுனியாவில் 7 மோட்டார் செல்கள் மீட்பு

வவுனியா குஞ்சுக்குளம் மற்றும் வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேட அதிரடிப் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளப்பகுதி மற்றும் வேலங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் வழங்கியிருந்தனர். குறித்த பகுதிக்கு விஜயம் செய்தகாவல் துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் 7 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு ...

Read More »

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பில் அரசுடன் பேசி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாடு தொடர்பாக 03.05.2021அன்று அப்பகுதி மக்களால் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ...

Read More »

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.37 லட்சம் கொரோனா நிதி உதவி

கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறி வருகிறது. கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது. இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு ...

Read More »

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து வந்த கப்பலில் இருந்த 12 பேர் புகலிடக் கோரிக்கை!

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து துறைமுகத்தை வந்தடைந்த கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து குதித்து Townsville பிரதேசத்துக்குள் தப்பிச்சென்றதாக கூறப்படும் கப்பல் பணியாளர் ஒருவர், பொலீஸாரிடம் சரணடைந்து தனக்கு ஆஸ்திரேலிய அரசு தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கப்பலில் வந்த இன்னும் பதினொரு பேரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பதினொரு பேரும் குறிப்பிட்ட கப்பலில் பணிபுரிந்த சிரிய நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் ...

Read More »

பயணத்தடை: இந்தியாவுக்கு எதிரான இனவாத அறிவிப்பா?

நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கூறியுள்ளர். அரசாங்கத்தின் அறிவிப்பு இந்தியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார். இந்தியாவில் கோவிட் பரவல் கொடூரமான அளவில் செறிவடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாயகத்துக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி – பயண ஓட்டைகளை பயன்படுத்தி – யாராவது ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரையிலான ...

Read More »