யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
Eelamurasu Australia Online News Portal