வவுனியா குஞ்சுக்குளம் மற்றும் வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேட அதிரடிப் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளப்பகுதி மற்றும் வேலங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
குறித்த பகுதிக்கு விஜயம் செய்தகாவல் துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் 7 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல் துறை நீதிமன்ற அனுமதியின் பின்னர் வெடிபொருட்களை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக தெரிவித்தனர்
Eelamurasu Australia Online News Portal