செய்திமுரசு

டெல்டாவை விட அதிக பாதிப்பை உருவாக்கும் லாம்ப்டா வைரஸ்

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்து ஆண்டு உலகமே ஸ்தம்பித்தது. பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர். அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து, உலகம் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தென்ஆப்பிரிக்காவில் ...

Read More »

யாழில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் : யாழ். அரச அதிபர்

கொரோனாத் தொற்றுப் ப ர வ லால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்டஅரச அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ். மா வ ட் ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட த ம்பாட்டி கிராமம், ச ண் டி லி ப் பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கி ராம அலுவலர் பி ரி வு ம் , காரை ந க ...

Read More »

சிறிலங்காவின் நீதித்துறை நம்பகம் அற்றது

பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை புறம் தள்ளி எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு போதும் நீதியை பெற்றுத்தராது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காணமற்போனோரை கண்டறிவதற்கான பணியகம் (Office of Missing Persons) தொடர்பில் எனது கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். ஆரம்பகட்டமாக கொண்டுவரவிருக்கும் நீதி விசாரணைக்கு உட்படுத்தல் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிரான சட்டவிதிகள் ஆகிய திருத்தங்களை வரவேற்கிறேன். இவை முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் நடவடிக்கைகள் என்பதில் ஐயமில்லை. இங்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், ...

Read More »

வடகடலில் சீனர்கள்?

வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர்  என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த பணிகளிலும் சீனர்கள் வேலைக்கமர்த்தப்படுவதாக அப்பதிவில் உள்ளது. ஆனால் அது சீனர் அல்ல கிழக்கை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பது தெரிய வந்ததும் சுமந்திரன் தான் வெளியிட்ட தகவலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சுமந்திரனுக்கு ஒரு பதில் குறிப்பையும் பதிவிட்டிருந்தது. வழமையாகத் தான் என்ன கதைக்கிறேன் என்பதனை நன்கு ...

Read More »

சிறுவர்களிடம் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி பரிசோதனை- ரஷியாவில் தொடங்கியது

ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனைகள் வெற்றியடைந்தால், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே பரிசோதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களையும் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இதற்காக பல தடுப்பூசிகள் பிரத்யேகமாக சிறாருக்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் பைசர் போன்ற தடுப்பூசிகள் ஏற்கனவே சிறார்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டு ...

Read More »

கதிரையை விட்டுக் கொடுப்பவருக்கு கடல் கடந்து கதிரை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலின் ஊடாக, எம்.பியாக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார். இதுதொடர்பில், ராஜபக்ஷர்களிடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோருடன் பஷில் ராஜபக்ஷவும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார். அதன்போது, தன்னுடைய விருப்பதை பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதியன்று, எம்.பியாக அவர், பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த  தேசியப் பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர்களில் ...

Read More »

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

சீனாவில் உள்ள 56 இனக்குழுக்களை குறிக்கும் வண்ணம், பீரங்கி குண்டுகளை 56 தடவைகள் முழங்கி, 9 நினைவு நாணயங்களை வெளியிட்டு, வானத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் செங்கொடியைப் பறக்க விட்டு, 100 என்று காணும் விதமாக ஜெட் விமானங்கள் பறக்க, வான்அதிரும் மேளங்களுடனும் துள்ளல் இசையுடனும், தியானமென் சதுக்கமே அதிரும் வண்ணம், 9 கோடி உறுப்பினர்களைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு நகரங்களில் ஒலிஒளி நிகழ்ச்சிகளை கட்சியினர் நடத்துகின்றனர். A mass gala celebrating the 100th anniversary. Getty ...

Read More »

முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 35 பேருக்கு தொற்று!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் SummitCare முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர்கள். நேற்றையதினம் இம்முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த 35 பேரில் 24 பேர் நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் 11 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து Bondi பரவல் ஊடாக கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கும் கோவிட் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read More »

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி

துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 84 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.‌ இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது அங்கு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். ...

Read More »

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பு சந்திப்பு!

சிறிலங்காவுக்கான  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளன . தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தீர்மானத்தினை நிறைவேற்றிய நாடுகள் பிறிதொரு தீர்மானம் தொடர்பில் ...

Read More »