ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலின் ஊடாக, எம்.பியாக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார். இதுதொடர்பில், ராஜபக்ஷர்களிடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோருடன் பஷில் ராஜபக்ஷவும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
அதன்போது, தன்னுடைய விருப்பதை பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதியன்று, எம்.பியாக அவர், பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்யும் ஒருவரை அவுஸ்திரேலியாவில் உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன