அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி

துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 84 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.‌
இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
அப்போது அங்கு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். மேலும் இதுபற்றி துனிசியா கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.