செய்திமுரசு

ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய்!

அம்பாறை மாவட்டம், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணொருவர், நேற்றிரவு (17) 9 மணியவில் ஒரே சூலில் 3 சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளார். நேற்றுக் காலை பிரவச வலி என 29 வயதுடைய குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 சிசுக்களும் பெறப்பட்டுள்ளதுடன், பெண் சிசுவொன்றும் ஆண் சிசுக்கள் இரண்டும்  தாயும் நலமாக உள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் பெண் சிசு 2,620 கிராமும் ஆண் சிசுக்கள் தலா 2,410 கிராமும் நிறையுடன் ஆரோக்கியமாக ...

Read More »

சீனாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் பட்டியலில் கூடுதலாக 1290 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை காவு வாங்கி உள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வுகான் நகரில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது. வைரஸ் பரவத் தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கொரோனா அவசரகால நிதியுதவி!

ஆஸ்திரேலியாவில் கொரோனா எதிரொலி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டு தொழிலாளர்களுக்கு அவசரகால நிதியுதவி வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த அவசரகால நிதியுதவியில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தவிர்க்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும் வாழ்வாதார சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் 482 எனும் தற்காலிக விசா விதிப்படி, பற்றாக்குறையின் அடிப்படையில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் இந்த விசாவின் கீழ், அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை ஆஸ்திரேலியாவில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இவ்விசா மூலம், தத்ரா எனும் ஹோட்டலினால் ஸ்பான்சர் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா சென்ற 6 வெளிநாட்டுத் தொழிலாளர்கள், ...

Read More »

21 ஆம் திகதி காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி!

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இம்மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு வருடம் நிறைவடைகிறது. இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு என கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இதேவேளை இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் ஆகியன ஏற்கனவே திட்டமிப்பட்டப்படி நடத்தப்படாது என்றும் ...

Read More »

டெங்கு, சிக்குன்குனியா போன்று கொரோனாவும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கும்! – மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ்

டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ஒரு  சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ், தடுப்பு மருந்து தயாரானதும் மூத்த பிரஜைகள் உட்பட சமுதாயத்தில இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கே அதை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொவிட் – 19 நோயினால் ...

Read More »

ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்!

தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழில் தெரிவித்தார் வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை ...

Read More »

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சீனா, அமெரிக்கா, இந்தியா போட்டி

கொரோனா வைரசின் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து, சந்தைக்கு முதலில் கொண்டு வந்து நிறுத்தப்போவது யார்? என்ற போட்டி இப்போது சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெறியாட்டம் போட்டு வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, 4 மாதங்களில் உலகமெங்கும் 19 லட்சம் பேரை தாக்கி, 1 லட்சத்து 26 ஆயிரம் பேரின் உயிர்களை உலகளவில் பலி வாங்கியும் இந்த கொலைகார வைரசின் யானைப்பசி அடங்கவில்லை. ஆனாலும் எப்படியாவது இந்த கொரோனா வைரசுக்கு முடிவு கட்டிவிட ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்ற வாலிபருக்கு 1 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மக்கள் கொரோனா வைரசின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் ஊரடங்கை மீறும் நபர்களுக்கு அபராதம், சிறை போன்ற தண்டனைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ...

Read More »

சங்கிலி தொடர் தொற்றுக்கு காரணம் என்ன?

தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (16) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாகக் கூறமுடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மதபோதகரினால் ...

Read More »

வாக்களிக்கப் போகும் மக்கட் தொகை வெகுவாகக் குறையும்!

நா்ாளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ;ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அந்த வகையில், கொரோனா முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்தக் கூடாதெனவும் மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் தெரிவித்துள்ளார். கேள்வி – நாடாளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற ...

Read More »