செய்திமுரசு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தங்களது நிதி பிரச்சனையை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ...

Read More »

உலகை அதிரவைத்திருக்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள்!

நிறவெறிக்கு எதிராக உலகெல்லாம் ஊர்வலங்கள் தற்போது நடப்பதற்கு அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இது போன்ற பல படுகொலைகள் இதுவரை பல நாடுகளில் நடந்தேறி இருக்கின்றன. கனடாவிலும் ஊர்வலங்கள் நடந்தேறின. தனிப்பட்ட சாதாரண ஒருவரின் மரணம், அதை வீடியோ படமாக்கியது, அதை ஊடகங்கள் வெளியே கொண்டுவந்த முறை, பொறுமையை இழந்த கறுப்பின மக்கள் ஒன்றுபட்டுச் செயலாற்றியது என்று எல்லாம் சேர்ந்துதான் அமெரிக்காவை இந்த மரணம் அதிரவைத்திருக்கின்றது. இது போன்ற வேறு நாடுகளில் நடந்த பல மரணங்களை மூடி மறைக்கவும் ...

Read More »

ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை என்கிறார் தேரர்!

ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த ...

Read More »

சிறிலங்கா படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை?

ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுவதை கடைப்பிடிக்குமுகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக கடந்த மூன்று தாசப்தகாலமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுத குழுக்களும் பயன்படுத்தும் 219 இடங்களை அடங்கிய வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும்,ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் வெளியிட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளின் முழுமையான அளவினை இந்த வரைபடம் வெளிப்படுத்தவில்லை என இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. ஜேவிபியின் முதலாவது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அரசு , தனியார் துறையின் மீது சைபர் தாக்குதல்!

அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலானது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்  மேலும் அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களைத் திருடி இருக்கலாம் ...

Read More »

ஊடகவியலாளர் அடையாள அட்டை விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு

ஊடகவியலாளர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் பொது கொள்கை அவசியம். இதுவரைகாலமும் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதைப் போன்று இம்முறையும் தகவல் திணைக்களத்தின் அனுமதியுடனே அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, எந்தவொரு செயற்பாடுகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரை தலையிடச் செய்வது என்பது பெரும் அச்சுறுத்தல் மாத்திரமின்றி அடக்குமுறை முயற்சி எனவும் எச்சரித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ...

Read More »

ஒன்றுபட்டுப் போராடினால் எதையும் மாற்ற முடியும்! கனடாவில் தமிழ் மக்கள் ……

மக்கள் சக்தி ஒன்றுபட்டுப் போராடினால் இந்த உலகில் எதையும் மாற்ற முடியும் என்பதைக் கனடாவில் தமிழ் மக்கள் மீண்டும ஒருமுறை நிரூபித்துள்ளனர் 253 பள்ளிகளைத் தன்னகத்தே கொண்டு 155,000 க்கும் மேற்பட்ட (தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட ) மாணவர்களைக் கொண்ட கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்திய பாடசாலைக் கல்விச் சபை, இவ்வாண்டு மே 18, 2020இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் “இன்று தமிழர் இனப்படுகொலை நினைவு நாள்” என்று குறிப்பிட்டு நினைவுகூர்ந்து வெளியிட்ட கீச்சக செய்திக்கு தமிழ்மக்கள் நன்றியையும் சிறிலங்கா ...

Read More »

அடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு: ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை மந்திரி

அடுத்த ஆண்டு வரைக்கும் ஆஸ்திரேலியாவின் எல்லை மூடப்பட வாய்ப்பு என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளை கண்காணிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 7,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102 பேர் உயிரிழந்தனர், 6,859 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தினாலும், ...

Read More »

யாழில் வாள் வெட்டு: இருவர் காயம்!

யாழ். வடமராட்சி – புலோலி காந்தியூர் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சண்டையில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், வர்த்தக நிலையம் ஒன்று ரவுடிகளால் உடைக்கப்பட்டது. நேற்று (17) இரவு 7.30 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல் துறையினர்  தெரிவித்தனர். இந்தச்சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் (வயது- 22), புவனேஸ்வரன் குகராஜ் (வயது- 19) ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் நேற்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் அடித்து ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலவீனங்கள் என்ன பட்டியலிடுகின்றார் மணிவண்ணன்!

எதிர்வரும் தேர்தலில் தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தேர்தலில் போட்டியிடுகின்ற அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் தனது கட்சியின் பலம் என்ன பலவீனங்கள் என்ன என்னவென்பதை வெளிப்படுத்தினார். கடும் சவால்களுக்கு மத்தியில் வளர்ந்த தமது கட்சி தற்போது மிகப்பெரிய மாற்றத்தை உறுதியாக உருவாக்கும் எனக்கூறும் அவர் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பை இக்காணொளியில் காணலாம்.  

Read More »