அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.
குறித்த சைபர் தாக்குதலானது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மேலும் அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களைத் திருடி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது வரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளதாகவும், அதைச் சரிசெய்யத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிநுட்ப வலைப்பின்னல்களைப் பாதுகாக்குமாறும் அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னணியில் இருப்பதாகக் குற்றச்சாட்டியுள்ளார்
கொரோனா விவகாரத்தில் அவுஸ்திரேலியா சீனா இடையே மோதல் நிலவி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal