வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த சோதனை சாவடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை (9)அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் ...
Read More »செய்திமுரசு
எவரும் வெளியேற முடியாது… கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த விக்டோரியா நிர்வாகம்
அவுஸ்திரியாவில் பொதுமக்களுக்கான 9 குடியிருப்பு வளாகங்களில் முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது விக்டோரியா மாகாண நிர்வாகம். சனிக்கிழமை விக்டோரியா மாகாணத்தில் 108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே மாகாண நிர்வாகம் இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளது. 108 பேருக்கு ஒரே நாளில் தொற்று என்பது இரண்டாவது மிக அதிக பாதிப்பு எண்ணிக்கை என கூறப்படுகிறது. இதனால் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள பொதுமக்களுக்கான 9 குடியிருப்பு வளாகங்களை கடுமையான கட்டுப்பாடுக்ளுடன் முழு ஊரடங்கிற்கு மாகாண நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. மட்டுமின்றி ...
Read More »‘மாபெரும் திட்டத்துடன் வருவோம்’
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்ற பின்னர், மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் அண்மையில், ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு, அவர் மேலும் தெரிவிக்கையில், “முப்பது ஆண்டு காலப் போருக்குப் பின்னர், அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சிமுறைமையின் ...
Read More »யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட ...
Read More »‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
கரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குக் கரோனா வைரஸ் பரவும். ஒருமனிதர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது கரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது. அதை மாற்றி, காற்றில் கரோனா வைரஸ் பரவும். ஒருவர் தும்மியபின், இருமியபின் அவரின் எச்சலின் ...
Read More »வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போரளி மரணம்
இயக்கச்சியில் கடந்த வாரம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் காயமடைந்தவரின் மனைவி உட்பட மேலும் இருவர் கைதாகி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read More »தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்துங்கள்…..!
13 ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் ; தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத்தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய அனைத்து தரப்புக்களும் இந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். சரித்திரத்தில் முதல் ...
Read More »சிறிலங்காவில் இராணுவத்தினருக்கு தடையற்ற அதிகாரம்
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும் தடையற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் வழமையான கொள்கைகளையும் கடந்து, அதிகாரம் மிக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட செயலணிகள் ஊடாக தன்னாட்சி அதிகாரம் உடையவர் போன்று இலங்கையின் ஜனாதிபதி நாட்டை எவ்வாறு ஆட்சி செய்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு விளக்கப்படமொன்றை சர்வதேச உண்மைக்கும் ...
Read More »மெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு
மெல்போர்ன் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவில் 9 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று குறைய ஆரம்பித்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் மெல்போர்ன் நகரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விக்டோரியா மாநில முதல்வர் 6 வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ...
Read More »காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரம்
கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே நோய் தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிடுமாறும் உலக சுகாதார நிறுவனத்துக்கு 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கடிதம் எழுதி உள்ளனர். உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த கொடிய வைரஸ், மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் மரணத்தை விளைவிக்கும் உயிர்க்கொல்லி ஆகும். இது மனிதர்கள் தும்மும்போதும், இருமும்போதும் தெறிக்கும் எச்சில் துளிகள் மூலம் அடுத்தவருக்கு பரவுவதாக ...
Read More »