13 ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் ;
தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத்தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய அனைத்து தரப்புக்களும் இந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
சரித்திரத்தில் முதல் தடவையாக நான்காவது அரசமைப்பு இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அந்த நான்காவது அரசமைப்பு ஒரு ஒற்றையாட்சியாக இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அதனை ஆதரிக்கும் நிலைமை உருவாகப் போகிறது. சர்வதேசம் இன்றைக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசமைப் பொன்று உருவாக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றது.
Eelamurasu Australia Online News Portal