அவுஸ்திரியாவில் பொதுமக்களுக்கான 9 குடியிருப்பு வளாகங்களில் முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது விக்டோரியா மாகாண நிர்வாகம். சனிக்கிழமை விக்டோரியா மாகாணத்தில் 108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே மாகாண நிர்வாகம் இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளது.
108 பேருக்கு ஒரே நாளில் தொற்று என்பது இரண்டாவது மிக அதிக பாதிப்பு எண்ணிக்கை என கூறப்படுகிறது.
இதனால் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள பொதுமக்களுக்கான 9 குடியிருப்பு வளாகங்களை கடுமையான கட்டுப்பாடுக்ளுடன் முழு ஊரடங்கிற்கு மாகாண நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
மட்டுமின்றி அதிக மக்கள் குடியிருக்கும் ஃப்ளெமிங்டன், கென்சிங்டன் பகுதி மற்றும் வடக்கு மெல்பேர்ன் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகங்களில் இருந்து எவரும் வெளியேறவோ உள்ளே செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு வாங்கவோ, பணிக்கு செல்லவோ, மருத்துவ உதவிகளை நாடவோ மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கானது சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11.59 மணிக்கு அமுலுக்கு வர உள்ளது. இந்த கடுமையான ஊரடங்கால் மொத்தம் 3,000 மக்கள் பாதிக்கப்படுவார் என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நடவடிக்கைகளை கண்காணிக்க மொத்தம் 500 பொலிசாரை இந்த 9 குடியிருப்பு வளாகங்களிலும் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலுக்கு பின்னர் இதுபோன்ற கடினமான நடவடிக்கை முன்னெடுப்பது இதுவே முதன் முறை. இது சீனாவில் வுஹான் நகரில் முதன் முறையாக கொரோனா பரவலை எதிர்கொள்ள முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு போன்ற நடவடிக்கை என கூறப்படுகிறது