செய்திமுரசு

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் வேட்பாளர் யார் ?

பங்காளி கட்சிகளுடன் ஆகஸ்ட் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி  ஏனைய பல்வேறு கட்சிகளும் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியில் கைசாத்திடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்து மத குருமார்களினதும் ஆசீர்வாதத்துடன் இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இந்த கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்!

அவுஸ்திரேலியாவில் விமானம் ஒன்று தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமான நிலைய கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்த் விமான நிலையத்தில் உள்ள லைட் கோபுரத்தில் விமானம் மோதியதை அடுத்து அவசர சேவை சம்பவ இடத்திற்கு விரைந்தது. விமானத்தில் 62 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் விமானம் தரையிறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் எற்படவில்லை,மேலும் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் வேறு எந்த ...

Read More »

கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமியத்திற்கு விரோதமானது!

மற்ற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும். ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் ...

Read More »

18 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு!

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பந்துப்பட்ட கூட்டணியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக ஜே.வி.பி.யினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

21,22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலப் பிரேரணை கையளிப்பு!

21, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் விஜயதாச ராஜபக்ஷ இன்று சமர்ப்பித்துள்ளார். பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு ஒரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ பெற்றுக்கொள்ள கூடிய குறைந்தபட்ச வாக்கு வீதத்தை தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு வகை செய்யக் கூடியதாக அரசியலமைப்புக்கான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளது. அத்துடன் உயர்பதவி நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வகைசெய்யக் கூடியதாக 22 ஆவது திருத்த ...

Read More »

‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதூரம்!

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது. பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நிமிடம் வரை பதிலளிக்கவும் இல்லை; தான் தவறாகக் கூறிவிட்டதாக, மறுத்துரைக்கவும் ...

Read More »

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்!

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன்  வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 ...

Read More »

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் – சாகல

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாத எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.   அத்துடன் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்குமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். மாத்தறை – வெலிகம , வரக்கப்பிட்டிய மற்றும் மீருப்ப பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் சேவை நிலையமான ‘ சேவாபியச ‘ கட்டடத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More »

5 ஜி வலையமைப்பு தொடர்பான உண்மை நிலை என்ன?

யாழ். மாவடடத்தில் ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொறுத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்ட்ங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் எமது மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவடட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ...

Read More »

அமெரிக்கா: அகதிகள் சிறையில் 3 இந்தியர்கள் 20 நாட்களாக உண்ணாவிரதம்!

அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்று டெக்சாஸ் எல்லையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்தியர்களில் 3 பேர் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சமடைய செல்லும் மக்களை அந்நாட்டின் சில மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து  தற்காலிக சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அவ்வகையில், டெக்சாஸ் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டு  எல் பாசோ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவை சேர்ந்த சிலர் ஓராண்டுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படாமல் ...

Read More »