அவுஸ்திரேலியாவில் விமானம் ஒன்று தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமான நிலைய கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்த் விமான நிலையத்தில் உள்ள லைட் கோபுரத்தில் விமானம் மோதியதை அடுத்து அவசர சேவை சம்பவ இடத்திற்கு விரைந்தது. விமானத்தில் 62 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் விமானம் தரையிறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் எற்படவில்லை,மேலும் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் வேறு எந்த நடவடிக்கைகளையும் சேவைகளையும் பாதிக்கவில்லை என பெர்த் விமான நிலையம் தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து கோபாம் விமான நிறுவனம் கூறியதாவது: தரையிறங்கிய விமானம் அங்கிருந்து நிறுத்துமிடத்திற்கு வரும் போது போது, கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளானது
இதன் விளைவாக, விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்தது. விமானத்தில் இருந்த 62 பயணிகள், நான்கு பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை. இந்த விமானம் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சேவையை இயக்கி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.