செய்திமுரசு

சிட்னியில் பாதுகாப்பான புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், பாதுகாப்பான முறையில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. டிசம்பர் 31ஆம் தேதியன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே நகர மையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். புத்தாண்டுக்கான வாணவேடிக்கை, இந்த ஆண்டு சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும். சிட்னி துறைமுகத்தைச் சுற்றிய பகுதிகளில் வாணவேடிக்கையைக் காண்பதற்கான சிறந்த இடங்கள், சுகாதார ஊழியர்களுக்கும் தீயணைப்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

Read More »

பஹ்ரைன் பிரதமர் காலமானார்

பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலமானார். உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியுமான இவர் ஓகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட ...

Read More »

புதிய அரசியல் யாப்பில் மலையக மக்களை பாதுகாக்கக்கூடிய சரத்துகள்,,,,,

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பின் மூலம் மலையக மக்களுடைய அரசியல் அபிலாஷைகள்¸ அடிப்படை உரிமைகள்¸ இனத்துவ இருப்பு மற்றும் தனித்துவ அடையாளங்கள் என்பனவற்றைப் பாதுகாக்கக்கூடிய சரத்துகளை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளதாக போராதனை பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் கூறுகின்றார். இலங்கையில் புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு நிபுணர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை இன்றைய அரசு நியமித்துள்ளது. அக்குழு இலங்கை மக்களிடமிருந்து முன்மொழிவுகளை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் கோரியுள்ளது. இந்நிலையில்¸ புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு மலையக மக்கள் தொடர்பான முன்மொழிவுகளை முன் ...

Read More »

கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றினால்  42 ஆவது மரணம் சம்பவித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்று காரணமாக காவல் துறை  வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

Read More »

யாழில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் விடுவிப்பு

யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை இன்று காலையில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டகுருநகர், திருநகர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் காரணமாக சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். குறித்த தொற்றாளர்கள் அக்கிராமங்களில் நடமாடி இருந்ததால் அக்கிராமங்களிலிருந்து யாரும் வெளியே செல்லாதவாறும், அக்கிராமங்களுக்குள் ...

Read More »

யாழ். மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ...

Read More »

‘கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்’

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன என்றும் இது தொடர்பாக அறிவிக்கப்படவோ, இறந்தோரின் மொத்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ...

Read More »

கொரோனா தடுப்பூசி – தயார் நிலையில் இங்கிலாந்து

கொரோனா தடுப்பூசி டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதற்காக தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயளாலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. ஆக்ஸ்போர்டு உள்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது. அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா ...

Read More »

தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை

2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் அணி  முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும் ; இருந்த அரசியல் உறவில் ஏற்பட்ட வெடிப்புக்களும் ; பகிரங்கமானவை. சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ;வீழ்வேன் என்று நினைத்தாயோ ; என்று பதிலுரைத்து அவர் வீறு கொண்டு எழுவதற்கு, ...

Read More »

மெல்போர்னில் ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கும் சமையல் கலைஞர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக உணவு கொடுத்து வருவது, பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆதரவற்றோருக்கு தமான் ஸ்ரீவஸ்தவ் என்ற 54 வயது நபர் செய்துவரும் உதவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளி சமையல் கலைஞரான இவர், ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வினியோகித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குவது இது புதிதல்ல. ஈராக்கில் வளைகுடா ...

Read More »