லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக அறிவித்து, தண்டப்பணம் செலுத்த உத்தர விட்டுள்ள விவகாரம், இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளில் உரசல்களை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுத்து விடுவது போல, சைகை மூலம் எச்சரிக்கை செய்திருந்தார், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ. இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பணியிலிருந்த அவரது இந்தச் செயல் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தது, அவருக்கு ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் மரத்தில் சுற்றியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு!
ஒரு அவுஸ்திரேலிய தம்பதியினர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, தங்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரிஸ்பேனைச் சேர்ந்த லியான் சாப்மேன் என்பவரும் அவருடைய காதலியும் வியாழக்கிழமை பிற்பகல் ஹைகேட் ஹில் பகுதியில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது பால்கனியில் இருந்த பறவைகள் வழக்கத்திற்கு மாறாக சோகமாக அமர்ந்திருப்பதை அவர்கள் கவனித்துள்ளனர். உடனே லியானின் காதலி அந்த பறவைகளை காணொளி எடுக்க ஆரம்பித்துள்ளார். சிறிது நேரம் கழித்து இருவரும், வீட்டிற்குள் நுழைய முயன்றபோது 10 ...
Read More »வைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோர் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது. நியூஸிலாந்தில் சுற்றுலாத் தளமான வைட் தீவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பின்போது தீவில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 9 பேரும், நியூஸிலாந்தைச் சேர்ந்த 5 பேரும், ஜேர்மனியைச் சேர்ந்த 4 பேரும், சீனாவைச் சேர்ந்த இருவரும், பிரிட்டனைச் சேர்ந்த இருவரும், மலேசியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்கலாக மொத்தம் வைட் தீவில் சுமார் 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் ...
Read More »குற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்!
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிற்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி, வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற குறித்த பெண் அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார். அத்துடன் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதுடன், இறுதியாக அவர் கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் வழங்கியிருந்தார். தான் கடத்தப்பட்டதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டுக்கமையவே குறித்த சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ...
Read More »தமிழர்களின் மனங்களை வெல்ல விசேட அமைச்சு விரைவில்…..!
ஜனாதிபதியும் இந்த விடயத்தை உணர்ந்துள்ளார். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல அவர்களின் அபிமானத்தை காப்பாற்றுவது அவசியம். கூட்டமைப்புடன் பேசுவதில் அர்த்தமில்லை. நாட்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்லும் வகையிலும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையிலும் செயற்பட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்காக தனியான ஒரு அமைச்சை உருவாக்கவேணடும். தமிழ் பேசும் அரசியல்வாதிகளை அன்றி மக்களை இணைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும். அந்த பொறுப்பை ...
Read More »ஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு!
நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள புதிய சூழலில் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை விடயங்களும் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற பிரேரணையின் அடுத்த நிலை என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா? ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடருமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் அனைவரது கவனமும் ஜெனிவா மனித உரிமை பேரவைப் பக்கமே திரும்பியிருக்கிறது. காரணம் எதிர்வரும் மார்ச் ...
Read More »டி20 உலகக்கோப்பைக்கு 360 டிகிரி-யை அழைத்து வர தென்ஆப்பிரிக்கா முயற்சி!
ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ விளையாட வைக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு முயற்சி செய்து வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். 360 டிகிரி என்று அழைக்கப்படும் அவர், இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோர் ஓய்வு பெற்றதால் அந்த அணி திணறியது. தற்போது அணியை சீரமைக்கும் வேலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தீவிரம் காட்டி வருகிறது. தென்ஆப்பிரிக்கா ...
Read More »உலக அழகியாக ஜமைக்கா மாணவி தேர்வு!
2019-க்கான உலக அழகி போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் 3-வது இடம் பிடித்தார். 69-வது உலக அழகி போட்டி (மிஸ்வேல்டு) லண்டனில் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 2019-ம் ஆண்டில் ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் ...
Read More »வெளிநாட்டவர்கள் உரிமைகொள்வதற்கு இடமளிக்கப்படாது!
நாட்டின் எந்தவொரு வளத்தையும் வெளிநாட்டவர்கள் உரிமைகொள்வதற்கு இடமளிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். வெயாங்கொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் புலனாய்வு பிரிவு பலவீனப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட பாதிப்பை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல இனத்தவர்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை கட்டியெழுப்புவதே தனது முதலாவது நோக்கமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும்!
வடமாகாணத்திற்கு மாகாணத்தின் புவியியல் வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். இன்று அவரிடம் வட மாகாண ஆளுநராக யாரை நியமிப்பது சிறந்தது என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஆளுநராக நியமிக்கப்படுபவர் தமிழ் மக்களின் வாழ்வியலை பூரணமாக புரிந்து கொண்டவரும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் போதிய அனுபவம் உள்ளவராகவும் உள்ள வடமாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும். வடமாகாணத்திற்கு ஒரு ஆளுனரை நியமிக்காமல் விடுவது சிங்கள தேசத்தை சேர்ந்த ...
Read More »