இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அடிமைகளாகவே இருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று(06) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கோவில்வயல் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி வேலைத்திட்ட முன்னேற்ற மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யார் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை கிட்டும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதனை கருத்தில் எடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 17 பேர் பலி!
அவுஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பதால் உண்டாகும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய நாளொன்றுக்கு 17 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. Australian National University மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் 19 ஆயிரம் பேர் மத்தியில் மேற்கொண்ட நுணுக்கமான ஆய்வின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 27 லட்சம் என்றும் இவர்களில் 11 ஆயிரத்து 400 பேர் வருடமொன்றுக்கு பல்வேறு நோய்களினால் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். இவர்களில் 17 பேர் சராசரியாக ...
Read More »அமெரிக்கா விரோதத்தோடுதான் உள்ளது! – வடகொரியா
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் இருக்கிறது என வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ...
Read More »ஒரு தசாப்தம் கடந்தும் கூட நிலையான வாழ்விடம் இல்லை!
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை 65 இலங்கை அகதிகளை இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில் பிறப்பித்த உத்தரவு நீண்டகாலப் பிரச்சினை ஒன்றுக்கு இரு நாடுகளும் தீர்வுகாணவேண்டிய தேவை மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது. இலங்கையில் இருந்து 1983 — 2012 காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தப்பியோடிவந்த சுமார் 95 ஆயிரம் அகதிகள் சம்பந்தப்பட்டதே இந்த பிரச்சினையாகும். அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் மத்திய அரசாங்கத்தின் கணிசமான நிதியுதவியுடன் மாநில அரசாங்கத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற 107 முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்று மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது மீதிப்பேர் முகாம்களில் வசிக்காத ...
Read More »அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க கூடாது!
விடுதலை புலிகளுடன் முன்னெடுக்கப்பட்ட 30 வருடகால போரின் போது கூட நாட்டை துண்டாட யாருக்கும் இடமளிக்க வில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ , தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக தாக்கம் செலுத்த கூடிய அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்குமிடையிலான சந்திப்பு நேற்று எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் சோபா மற்றும் மில்லேனியம் சவால்கள் ஆகிய ஒப்பந்தங்களில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய ...
Read More »பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை!
இந்தியாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் சுமார் 80 – 100 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பலாலி விமான நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாற தெரிவித்தார். அங்குதொடர்ந்தும் கூறுகையில் , வடக்கும் கிழக்குமாகு 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த்தினால் எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்ட பிரதேசங்களாகும். எனினும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் என்ற ...
Read More »இந்த புகைப்படம் உலகையே உலுக்கியது ஏன்?
அமெரிக்காவில் பறவை ஒன்று தனது குஞ்சுக்கு உணவு வழங்கிய புகைப்படம் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கடற்கரையில் பறவைகள் பல அழகாக பறந்துக் கொண்டிருப்பது வழக்கம். இதனை அழகாக புகைப்படம் எடுக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கரேன் மேசன் எனும் புகைப்பட கலைஞர் சென்றிருந்தார். வரிசையாக பல பறவைகளின் அசைவுகளை வித்தியாசமாக படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பிளாக் ஸ்கிம்மர் எனும் பறவை தனது குஞ்சிடம் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது. அந்த பறவையின் ...
Read More »மரணதண்டனை: தீர்வில்லாத தீர்வு!
அண்மையில், நால்வருக்கு மரணதண்டனையை உறுதிசெய்து, ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சி, கொஞ்சமல்ல. ஆனால், இப்படியொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்று எண்ண நியாயமில்லை. அவரது நடத்தை, அதையே காட்டி நிற்கின்றது. மரணதண்டனை வழங்குவதற்கு, அடிப்படையாக அமைவது, அந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வும் அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமேயாகும். இலங்கை போன்ற நாடுகளில், சட்டம் ஒழுங்கின் யோக்கியம் எமக்குத் தெரியாததல்ல. பொலிஸார் குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து, அந்தக்க குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து, ...
Read More »மரண தண்டனையை தடுப்பதற்கான மனு நாளை வரை ஒத்திவைப்பு!
மரண தண்டனை அமுல்படுத்துவதை தடைசெய்ய உத்தரவிடுமாறு கோரி, ஊடகவியலாளர் ஒருவரால், தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையெனத் தெரிவித்து, எதிர்ப்புக்கான விளக்கங்களை சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் நாயகம் நெரின் புள்ளே இன்று நீதிமன்றத்தில் முன்வைத்தார். பிரதி சொலிஸிட்டர் நாயகம் நெரின் புள்ளே முன்வைத்துள்ள எதிர்ப்பு தொடர்பில், மேலதிக விளக்கங்களை முன்வைப்பது நாளை வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
Read More »ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை!
சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லையெனத் தெரிவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மூன்று மாதங்களுக்குள் தீர்வுகள் கிடைக்காவிடின் ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை. இது சும்மா பேச்சுக்காகப் பேசும் பேச்சு போலவே தெரிகிறது என்றார். சம்பந்தனின் தலைமைத்துவதின் கீழ் அவரது காலத்தில் தீர்வுகள் கிடைக்குமென்ற சாத்தியங்கள் தென்படவில்லை என்றும் கூறிய அவர், ஆயுதமேந்தும் நிலையில் தமிழர்கள் இல்லையென்றார். கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் நோர்வே சுன்மோர வாழ் மக்களின் நிதியுதவியுடன் நேற்று(03) இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் ...
Read More »