மரண தண்டனை அமுல்படுத்துவதை தடைசெய்ய உத்தரவிடுமாறு கோரி, ஊடகவியலாளர் ஒருவரால், தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையெனத் தெரிவித்து, எதிர்ப்புக்கான விளக்கங்களை சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் நாயகம் நெரின் புள்ளே இன்று நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
பிரதி சொலிஸிட்டர் நாயகம் நெரின் புள்ளே முன்வைத்துள்ள எதிர்ப்பு தொடர்பில், மேலதிக விளக்கங்களை முன்வைப்பது நாளை வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal