அவுஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பதால் உண்டாகும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய நாளொன்றுக்கு 17 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Australian National University மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் 19 ஆயிரம் பேர் மத்தியில் மேற்கொண்ட நுணுக்கமான ஆய்வின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 27 லட்சம் என்றும் இவர்களில் 11 ஆயிரத்து 400 பேர் வருடமொன்றுக்கு பல்வேறு நோய்களினால் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
இவர்களில் 17 பேர் சராசரியாக ஒவ்வொரு நாளும் உயிரிழக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட ஆய்வு – இப்போது புகைப்பிடிப்பவர்கள் , முன்னர் புகைப்பிடித்தவர்கள் என்று சுமார் 19 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட போது அவர்களில் புகைத்தலால் உண்டான 36 வகையான நோய்க்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதால் இதயநோய் ஏற்பட்டு ஆண்டொன்றுக்கு சுமார் 6400 அவுஸ்திரேலியர்கள் இறக்கின்றபோதும் புகைத்தல் மீதான விருப்பம் அவுஸ்திரேலியாவில் தொடருவதாகவே குறிப்பிட்ட ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற தகவலின்படி, 45 வயதோடு புகைத்தலை நிறுத்துபவர்கள் புகைத்தலால் மாரடைப்பு ஏற்படுவதை 90 வீதத்தினால் குறைப்பதற்கு வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.